பூஜை என்ற பெயரில் போலி சாமியாரின் அந்தரங்க லீலை! உடலுறவில் இருந்தால் தான் தோஷம் போகும்.. பெற்றோரை ஏமாற்றி 17 வயது சிறுமியை சீரழித்த போலி சாமியார்! இறுதியில் வெளிவந்த அதிர்ச்சி உண்மை... கொடூர சம்பவம்!!!
மகாராஷ்டிராவில் ஜாதக தோஷம் நீக்குவதாகக் கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலிச் சாமியார் கைது செய்யப்பட்டார்.
மகாராஷ்டிர மாநிலம் லாத்தூர் மாவட்டத்தில் ஜாதக தோஷத்தை நீக்குவதாகக் கூறி 17 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக போலிச் சாமியார் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் 4 நாட்கள் போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
ஜாதகத்தில் தோஷம் இருப்பதாகக் கூறிய சாமியார்
லாத்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த சிறுமியின் பெற்றோர், மகளின் ஜாதகத்தைப் பார்ப்பதற்காக அப்பகுதியைச் சேர்ந்த ராமேஷ்வர் ராமதாசி மகாராஜை அணுகியுள்ளனர். அப்போது, சிறுமியின் ஜாதகத்தில் கடுமையான தோஷம் இருப்பதாக அவர் கூறியுள்ளார். இதை சரி செய்ய சிறப்புப் பூஜை நடத்த வேண்டும் என்றும் பெற்றோரை நம்ப வைத்துள்ளார்.
இதையும் படிங்க: விளையாடிக் கொண்டிருந்த சிறுமி திடீர் மாயம்.. அறையில் கேட்ட அழுகை சத்தம்.. பஞ்சாப்பில் அதிர்ச்சி!
பூஜை என்ற பெயரில் பாலியல் வன்கொடுமை
இதையடுத்து சிறுமியின் வீட்டிற்கு பூஜை செய்வதற்காக வந்த ராமேஷ்வர், பூஜையின்போது பெற்றோரை அறைக்கு வெளியே இருக்குமாறு கூறியதாக தெரிகிறது. அவர்கள் வெளியே சென்ற பின்னர், சிறுமியிடம் உடலுறவு கொண்டால் மட்டுமே ஜாதக தோஷம் நீங்கும் எனக் கூறி மிரட்டியதாக போலீஸ் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் சிறுமியிடம் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது. மேலும், நடந்ததை யாரிடமும் தெரிவித்தால் தோஷம் நீங்காது எனக் கூறி சிறுமியை அச்சுறுத்தியுள்ளார்.
கர்ப்பமான சிறுமி;
சில நாட்களுக்குப் பிறகு சிறுமி கர்ப்பமானதைத் தொடர்ந்து, தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உடனடியாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் POCSO Act உள்ளிட்ட பல்வேறு சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து ராமேஷ்வர் ராமதாசி மகாராஜை கைது செய்தனர். மேலும், மூடநம்பிக்கை மற்றும் பூடான எதிர்ப்புச் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?