குடும்பத்துக்காக வாழ்க்கையை அர்ப்பணித்த மனைவிக்கு... இறுதியில் பணக்கார தொழிலதிபர் கொடுத்த பரிசு! வயதான காலத்தில் இப்படி ஒரு நிலை... அதிரவைக்கும் சம்பவம்!!!
மகளுடன் பூங்காவுக்கு சென்ற சீமா, அங்கு தனியாக அமர்ந்திருந்த மூதாட்டியை வீட்டு வேலைக்கு அழைத்துச் சென்றார். பின்னர் அவரது வாழ்க்கையின் அதிர்ச்சி உண்மை தெரியவந்தது.
தினமும் மகளுடன் பூங்காவுக்கு சென்ற சீமாவின் கவனத்தை, அங்கு தனியாக அமர்ந்திருந்த மூதாட்டி ஒருவர் ஈர்த்துள்ளார். அவரிடம் பேசிய சீமா, தனது வீட்டில் வேலை செய்ய வருமாறு அழைத்துள்ளார். ஆனால், அந்தப் பெண்ணின் பின்னணி தெரியவந்தபோது சீமாவுக்கே அதிர்ச்சியாக இருந்தது.
பூங்காவில் சந்தித்த அந்த மூதாட்டி, சீமாவின் வீட்டில் சமையல் உள்ளிட்ட வேலைகளை மிகவும் நேர்த்தியாக செய்து வந்துள்ளார். அதேபோல், சீமாவின் குழந்தையையும் சொந்த பேத்தியைப் போல அன்புடன் கவனித்துக்கொண்டார். அவரது பேச்சும், பழகும் விதமும் நல்ல குடும்பத்தைச் சேர்ந்தவர் என்பதை உணர்த்தியதால், சீமாவுக்கு அவரது வாழ்க்கை குறித்து தெரிந்துகொள்ளும் ஆர்வம் ஏற்பட்டது.
இதையும் படிங்க: இன்ஸ்டா ரீல்ஸ் பார்க்க முடியாத விரக்தி.. போனை உடைத்து விட்டு பெண் எடுத்த விபரீத முடிவு!
தொழிலதிபர் குடும்பத்தைச் சேர்ந்தவர்
வேலையில் காட்டிய அக்கறையும் குழந்தையிடம் அவர் பழகிய விதமும் சீமாவை கவர்ந்தன. இதையடுத்து, மெதுவாக அவரிடம் பேசி அவரது குடும்ப பின்னணி குறித்து கேட்டுள்ளார். அப்போதுதான் அந்த மூதாட்டியின் பின்னணி தெரியவந்துள்ளது.
அவரது கணவர் மிகப்பெரிய தொழிலதிபர் என்றும், தம்பதிக்கு இரண்டு மகன்கள் இருப்பதாகவும் கூறப்படுகிறது. இருவரும் திருமணத்துக்குப் பிறகு வெளிநாட்டில் செட்டிலாகிவிட்டனர். வயதான காலத்தில் கணவர் வேறு ஒரு பெண்ணை வீட்டுக்கு அழைத்து வந்ததுடன், அந்த மூதாட்டியை வீட்டை விட்டும் வெளியேற்றியதாக தெரிகிறது.
வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலை
குடும்பத்துக்காக வாழ்ந்த அவர், வயதான காலத்தில் ஆதரவின்றி நிற்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். வேறு வழியின்றி, தள்ளாத வயதிலும் வயிற்றுப் பிழைப்புக்காக வீட்டு வேலை செய்து வருகிறார். மூதாட்டியின் கதை சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் நிலையில், அவரது வாழ்க்கை குறித்து பலரும் வேதனையுடன் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: கலிகாலம்.... 2 குழந்தைகளின் தாயும் 18 வயது இளம்பெண்ணும் செய்த காதல் திருமணம்! வைரலாகும் ஷாக்கிங் வீடியோ...!!!