×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

புகை பிடிக்காதவர்களுக்கும் ஆபத்து.. இந்தியாவில் 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி ஆய்வு!

புகை பிடிக்காதவர்களுக்கும் ஆபத்து.. இந்தியாவில் 3.25 லட்சம் பேர் உயிரிழப்பு.. வெளியான அதிர்ச்சி ஆய்வு!

Advertisement

புகைப்பிடிப்பது உடல்நலத்திற்கு கேடு விளைவிக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால், ஒருவர் புகைக்கும் சிகரெட்டில் இருந்து வெளியேறும் புகையை அருகில் இருப்பவர்கள் சுவாசிப்பதும் பல்வேறு உடல்நலப் பாதிப்புகளை ஏற்படுத்தும். ‘மறைமுகப் புகை’ எனப்படும் இந்த பாதிப்பு, புகைப்பிடிக்காதவர்களையும் கடுமையாக பாதித்து வருவதாக ஆய்வுகள் எச்சரிக்கின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் மறைமுகப் புகையால் ஏற்படும் உயிரிழப்புகள் கடந்த 10 ஆண்டுகளில் கிட்டத்தட்ட 50 சதவீதம் அதிகரித்துள்ளதாக தி லான்செட் பப்ளிக் ஹெல்த் இதழில் வெளியான ஆய்வு தெரிவிக்கிறது. அதன்படி, 2023-ம் ஆண்டில் இந்தியாவில் மறைமுகப் புகையால் ஏற்படும் நோய்களுக்கு தொடர்புடையதாக மதிப்பிடப்பட்ட உயிரிழப்புகளின் எண்ணிக்கை 3,25,600 ஆகும். 1990-ம் ஆண்டில் இந்த எண்ணிக்கை 2,17,700 ஆக இருந்தது.

மேலும், 2023-ம் ஆண்டில் இந்தியாவில் சுமார் 44.4 கோடி பேர் பிறர் புகைத்த புகைக்கு பாதிப்புக்குள்ளானதாக ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணிக்கையில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா உலகளவில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 1990-ல் இந்தியாவில் மறைமுகப் புகைக்கு பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சுமார் 37.5 கோடியாக இருந்த நிலையில், 2023-ல் அது 44.4 கோடியாக அதிகரித்துள்ளது.

இதையும் படிங்க: என்னடி பித்தலாட்டம் ஆடுற.... வீட்ல டிவியே இல்லையே! யாரு இவன்? மனைவியின் திருவிளையாடலை கண்டு கடுப்பாகி கணவன் செய்த காரியத்தை பாருங்க..!!!

மறைமுகப் புகைக்கு பாதிக்கப்படும் அளவின் சதவீதம் இந்தியாவில் குறைந்திருந்தாலும், மக்கள் தொகை அதிகரிப்பின் காரணமாக பாதிக்கப்படுவோரின் மொத்த எண்ணிக்கை உயர்ந்துள்ளதாக ஆய்வு சுட்டிக்காட்டுகிறது. இதனால் புகைப்பிடிப்பவர்களை மட்டுமின்றி, அவர்களைச் சுற்றியுள்ளவர்களையும் பாதுகாக்கும் வகையில் வீடு, பணியிடம் மற்றும் பொது இடங்களில் புகையில்லா சூழலை உருவாக்குவது முக்கியம் என சுகாதார நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.

இதையும் படிங்க: இனிமேலும் பொறுமை இல்லை... 2 ஆண்டுகளாக கிராமத்தில் நெட்வொர்க் இல்லை..! ஆத்திரமடைந்து டவர் ஊழியரை கட்டி வைத்த கிராம மக்கள்..! வைரல் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#No smoking #Non smokers #cancer #Smoking causes
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story