கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள் - நாய்குட்டியுடன் நாடாளுமன்றத்திற்கு வந்த காங்கிரஸ் எம்பி காட்டம்.!
நாடாளுமன்ற கூட்டத்தொடருக்கு காங்கிரஸ் எம்பி நாய்குட்டியுடன் வந்தார்.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டம் நடைபெற்று வரும் நிலையில், காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி தனது நாய்க்குட்டியுடன் நாடாளுமன்ற வளாகத்துக்கு வந்தது விவாதப்பொருளாக மாறி உள்ளது.
இந்திய நாடாளுமன்ற கூட்டத்தொடர் நேற்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்திற்கு காங்கிரஸ் எம்பி ரேணுகா சவுத்ரி தனது நாய்க்குட்டியுடன் வந்த சம்பவம் கவனத்தை பெற்றது. குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியதை முன்னிட்டு காங்கிரஸ் கட்சியின் மூத்த உறுப்பினர் ரேணுகா தனது காரில் நாடாளுமன்றத்துக்கு வந்தார்.
நாய்குட்டியுடன் வந்த காங்கிரஸ் எம்பி:
அப்போது நாய்க்குட்டியும் அவருடன் வந்த நிலையில், இது தொடர்பான செய்திகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக செய்தியாளர் ஒருவர் கேள்வி எழுப்பியபோது, இந்த விஷயம் எல்லாம் ஒரு பிரச்சனை கிடையாது. நாய் என்பது ஒரு சின்ன உயிரினம். அது யாரையும் கடிக்காது. கடிப்பவர்கள் உள்ளே இருக்கிறார்கள் என நாடாளுமன்றத்தின் ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்களை மறைமுகமாக சுட்டி காட்டி பேசி இருந்தார்.
இதையும் படிங்க: PM Narendra Modi: 'சி.பி. ராதாகிருஷ்ணனுடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி' - நாடாளுமன்ற கூட்டத்தொடரில் பிரதமர் நரேந்திர மோடி பெருமிதம்.!
பாஜக எம்பி காட்டம்:
இது தொடர்பாக பேசிய பாஜக எம்பி ஒருவர் செல்லப்பிராணிகளை நாடாளுமன்ற அவைக்குள் கொண்டு வர அனுமதி இல்லை. பொறுப்புக்கூறல் என்பது அனைவருக்கும் முக்கியம் என பேசியிருந்தார். இதற்கு பதிலளித்த காங்கிரஸ் எம்பி, நான் இங்கு வந்து கொண்டிருக்கும் போது ஒரு ஸ்கூட்டர் காருடன் மோதியது. இந்த நாய்க்குட்டி சாலையில் சுற்றி திரிந்தது. அது விபத்தில் சிக்குமோ என்று எண்ணத்தில் காரில் வைத்து நாடாளுமன்றத்திற்கு எடுத்து வந்து திருப்பி அனுப்பினேன்.
ரேணுகா சவுத்ரி பதில்:
கார் போய்விட்டது. நாயும் அப்படித்தான். நான் நாய்க்குட்டியை வீட்டில் விட சொல்லி அனுப்பி விட்டேன். இது ஒரு பெரிய விவாத பொருளாக மாறிவிட்டது. அரசாங்கத்திற்கு வேறு எதுவும் செய்ய வேண்டாமா? நான் மீண்டும் தெருவில் விட சொல்லவில்லை. என்னுடனே அழைத்து வந்து என் காருடன் அனுப்பி வைத்துள்ளேன். அரசாங்கம் செய்வதற்கு இன்னும் பல விஷயங்கள் இருக்கிறது என தெரிவித்துள்ளார்.