×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஆண்டுக்கு 40 லட்சம் சம்பளம்... ஆனா அந்த மாப்பிள்ளை வேணாம்...! ராகுல் காந்தியை ரோல் மாடலாக.... இணையத்தில் வைரலாகும் எக்ஸ் பதிவு..!!!

கர்நாடக இளம்பெண் ஆருஹி ரெட்டி, ராகுல் காந்தியை ரோல் மாடலாக குறிப்பிட்டிருந்ததால் திருமண வரனை நிராகரித்ததாக கூறிய பதிவு சமூக வலைதளங்களில் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

கர்நாடகாவைச் சேர்ந்த ஆருஹி ரெட்டி என்ற இளம்பெண்ணுக்கு சமீபத்தில் திருமண வரன் வந்துள்ளது. நல்ல தோற்றம், குடும்ப பின்னணி மட்டுமின்றி ஆண்டுக்கு ரூ.40 லட்சம் சம்பளம் பெறும் உயர் பதவியில் இருந்த அந்த இளைஞரை, திருமணத்திற்கு முன்பே அவரது சமூக வலைதள பக்கத்தை பார்த்த ஆருஹி நிராகரித்துள்ளார்.

இன்ஸ்டாகிராம் பதிவால் மாறிய முடிவு

மாப்பிள்ளையின் Instagram Profile-ஐ பார்த்தபோது, அவர் ராகுல் காந்தியை தனது ரோல் மாடலாக குறிப்பிட்டிருந்ததாக ஆருஹி தெரிவித்துள்ளார். இதை பார்த்ததும் அந்த வரனை ஏற்கும் எண்ணம் தனக்கு இல்லை என அவர் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: உச்சக்கட்ட கொடூரம்! இன்ஸ்டா நண்பனால் 24 மணி நேரம் சித்திரவதை அனுபவித்த 12 ஆம் வகுப்பு மாணவி! கைவிலங்கிட்டு, பெல்டால் அடித்து கொடூரமாக பாலியல் தொல்லை... பகீர் சம்பவம்!!!

இதற்கான காரணத்தை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்த ஆருஹி, ராகுல் காந்தியை ரோல் மாடலாகக் கொண்ட ஒருவரின் சிந்தனை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், அத்தகைய நபர் எதிர்காலத்தில் தனது குழந்தைகளுக்கு என்ன மாதிரியான கருத்துகளை கற்றுக்கொடுப்பார் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

“பணம், அழகைவிட கொள்கைகளே முக்கியம்”

தனக்கு பணம், அழகு, வசதியான வாழ்க்கையைவிட நாட்டுப்பற்று மற்றும் தனது மத நம்பிக்கைகளே முக்கியம் என்றும் ஆருஹி தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார். தனது அரசியல் மற்றும் தனிப்பட்ட கொள்கைகளுடன் ஒத்துப்போகாத ஒருவரை வாழ்க்கைத் துணையாக ஏற்க முடியாது என்பதே அவரது நிலைப்பாடாக உள்ளது.

சமூக வலைதளங்களில் தீவிர விவாதம்

ஆருஹியின் இந்த திருமண வரன் நிராகரிப்பு பதிவு சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது. திருமணம் போன்ற முக்கியமான வாழ்க்கை முடிவுகளில் அரசியல் கொள்கைகள் மற்றும் தனிப்பட்ட நம்பிக்கைகளுக்கு எவ்வளவு முக்கியத்துவம் அளிக்கலாம் என்பது குறித்து நெட்டிசன்கள் மத்தியில் மாறுபட்ட கருத்துகள் பதிவாகி வருகின்றன.

 

இதையும் படிங்க: பார்க்காமலே மலர்ந்த காதல்! 2 மாதத்தில் திருமணம்... 18 ஆண்டுகால அழகான வாழ்க்கை! இறுதியில் நடந்த கொடுமை.... மனதை உலுக்கிய உண்மைக்கதை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஆருஹி ரெட்டி #Marriage proposal #ராகுல் காந்தி #Instagram #சமூக வலைதளம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story