×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நள்ளிரவில் காதலியை பார்க்க சென்ற இளைஞர்.. விடியற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

நள்ளிரவில் காதலியை பார்க்க சென்ற இளைஞர்.. விடியற்குள் நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

பீஹார் மாநிலம் சிவஹர் மாவட்டத்தில், நள்ளிரவில் காதலியை சந்திக்க சென்றதாகக் கூறப்படும் இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

பீஹார் மாநிலத்தில் லலன் குமார் என்ற இளைஞர் கடந்த புதன்கிழமை நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அவர் காதலியை சந்திப்பதற்காக அவரது வீட்டுக்குச் சென்றதாகக் கூறப்படுகிறது. அப்போது காதல் விவகாரம் தொடர்பாக அங்கு தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது.

இதையடுத்து, சிலர் லலன் குமாரை தடிகள் மற்றும் இரும்புக் கம்பி உள்ளிட்டவற்றால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் போலீசார் அங்கு சென்று உடலை மீட்டு, பிரேதப் பரிசோதனைக்காக சிவஹர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதையும் படிங்க: காதலியை ரகசியமாக சந்திக்க இரவில் சென்ற இளைஞர்… மறுநாள் மணமகனான அதிர்ச்சி சம்பவம்!

காதல் விவகாரம் கொலைக்கான காரணமாக இருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் போலீஸார் தெரிவித்துள்ளார். இருப்பினும், தாக்குதலில் எத்தனை பேர் ஈடுபட்டனர் என்பது உள்ளிட்ட விவரங்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

சம்பவத்தைத் தொடர்ந்து அப்பகுதியில் பதற்றமான சூழல் நிலவுவதால் போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும், சம்பவத்துக்கான முழுமையான காரணம் மற்றும் தாக்குதலில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர். குற்றத்தில் தொடர்புடையவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: ஆசை வார்த்தையில் சிக்கிய 15 வயது சிறுமி… கெஸ்ட் ஹவுஸில் நடந்தது என்ன?

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bhihar #Love #Love problem #Couples #Murder
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story