×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சாக்கடை கால்வாயிலிருந்து வெளியே தெரிந்த மனித கை! 5 நாட்கள் உணவு, தண்ணீர் இல்லாமல் சிக்கிய வாலிவர்! மீட்புக்கு பின் முன்னுக்கு பின் முரணாக பதில்! அதிர்ச்சி சம்பவம் !!!

சத்தீஸ்கர் பிலாஸ்பூரில் சாக்கடை கால்வாயில் சிக்கிய வாலிபர் 5 நாட்கள் கழித்து உயிருடன் மீட்பு. இந்த அதிர்ச்சி சம்பவம் குறித்து போலீஸ் விசாரணை தீவிரம்.

Advertisement

சத்தீஸ்கர் மாநிலம் பிலாஸ்பூரில் நிகழ்ந்த அதிர்ச்சி சம்பவம் பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாக்கடை கால்வாயில் சிக்கியிருந்த வாலிபர் ஒருவர் ஐந்து நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்ட சம்பவம் அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

கால்வாயில் சிக்கிய வாலிபர்

பிலாஸ்பூர் பழைய பேருந்து நிலையம் அருகே உள்ள பெரிய கால்வாயில் வெள்ளிக்கிழமை காலை மனித கையொன்று மட்டும் வெளியே தெரிந்ததை பார்த்த பாதசாரிகள் அதிர்ச்சியடைந்தனர். அருகில் சென்று பார்த்தபோது, கால்வாயின் அடியில் சிக்கியிருந்த வாலிபர் உதவி கேட்டு அலறியதாக கூறப்படுகிறது.

மீட்பு நடவடிக்கை

தகவலறிந்து சம்பவ இடத்துக்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள் மற்றும் காவல்துறையினர், ஜேசிபி இயந்திரத்தின் உதவியுடன் சிமெண்ட் தகடுகளை உடைத்து மீட்பு பணியை தொடங்கினர். நீண்ட நேர முயற்சிக்குப் பிறகு, அந்த வாலிபர் பத்திரமாக வெளியே மீட்பு செய்யப்பட்டார்.

இதையும் படிங்க: பட்டப்பகலில் நடுரோட்டில் நண்பனை சரமாறியாக கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!

அடையாளம் மற்றும் விசாரணை

மீட்கப்பட்டவர் குமார் சவுகான் (32) எனத் தெரியவந்தது. அவரிடம் போலீஸார் விசாரணை நடத்தியபோது, முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்ததாக கூறப்படுகிறது. சில நேரங்களில் சிரித்தபடியே பேசியதால், அவரது மனநிலை குறித்தும் சந்தேகம் எழுந்துள்ளது. உள்ளூர் மக்களின் தகவலின்படி, அவர் கடந்த ஐந்து நாட்களாக அந்த குறுகிய கால்வாயில் சிக்கியிருந்திருக்கலாம் என கூறப்படுகிறது. உணவு, நீரின்றி இருந்தபோதும் பெரிய காயங்கள் ஏதும் இல்லாதது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

வைரலான வீடியோ

இந்த மீட்பு நடவடிக்கையின் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது. அவர் எவ்வாறு கால்வாயில் சிக்கினார்? யாராவது தள்ளிவிட்டார்களா அல்லது தவறி விழுந்தாரா? என்பது குறித்து போலீஸார் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பாதுகாப்பற்ற நிலையில் உள்ள திறந்த கால்வாய்கள் குறித்து பொதுமக்கள் கவலை வெளியிட்டுள்ளனர். இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடைபெறாத வகையில் பாதுகாப்பு நடவடிக்கைகள் அவசரமாக எடுக்கப்பட வேண்டும் என மக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: மரண பீதியாகும் காட்சி! ரயிலுக்குள் சிங்கம் பாய்ந்து தாய் மற்றும் குழந்தையை இழுத்து சென்று கொடூர தாக்குதல்.. அதிர்ச்சி வீடியோ..!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Bilaspur #சாக்கடை #rescue #சத்தீஸ்கர் #police investigation
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story