பட்டப்பகலில் நடுரோட்டில் நண்பனை சரமாறியாக கத்தியால் குத்தி கொலை செய்த இளைஞர்! வெளியான அதிர்ச்சி வீடியோ..!!!
ஹைதராபாத்தில் நடுரோட்டில் இளைஞர் ஒருவரை கத்தியால் பலமுறை குத்திய கொடூர சம்பவம் அதிர்ச்சி. வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக வைரலாகி வருகிறது.
ஹைதராபாத்தில் நடந்த கொலைவெறி தாக்குதல் சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் சட்டம்-ஒழுங்கு நிலையைப் பற்றி தீவிர கேள்விகளை எழுப்பியுள்ளது. பொதுமக்கள் நிறைந்த சாலையில், ஒரு இளைஞர் மீது கத்தியால் தாக்குதல் நடத்தப்பட்ட அதிர்ச்சி சம்பவம் தற்போது சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.
பட்டப்பகலில் நடந்த கொடூர தாக்குதல்
இந்த சம்பவம் ஹைதராபாத்தின் ஜகத்கிரிகுட்டா பேருந்து நிலையம் அருகே நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர் ரஷீத் என அடையாளம் காணப்பட்டுள்ளார். அவரை தாக்கியவர் அவரது நண்பர் பாலா ரெட்டி என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர். பாலா ரெட்டி நடுரோட்டில் பட்டப்பகலில் ரஷீதை மீண்டும் மீண்டும் கத்தியால் குத்திய காட்சி அங்கிருந்த பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
இதையும் படிங்க: வேணாம் சார்... வேணாம் சார்! வலியில் கதறும் குழந்தை! கோவை காப்பகத்தில் பெல்டால் அடிச்ச கொடூர சம்பவம்! வீடியோ வெளியாகி பரபரப்பு....
சமூக ஊடகங்களில் வைரலான வீடியோ
சம்பவத்துக்கான வீடியோ தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. அதில், பாலா ரெட்டி குறைந்தது ஆறு முறை ரஷீதை குத்துவதும், மற்றொரு நபர் பின்னால் இருந்து அவரை பிடித்து நிறுத்துவதும் தெளிவாகப் பதிவாகியுள்ளது. சில நொடிகளில் ரஷீத் அவர்களின் பிடியிலிருந்து தப்பித்து ஓட முயற்சிக்கிறார். காயங்களுடன் இருந்தபோதும் அவர் சம்பவ இடத்திலிருந்து தப்பி ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
போலீஸ் விசாரணை தீவிரம்
ரஷீத் அருகில் சரிந்து விழுந்ததை கண்ட பொதுமக்கள் உடனடியாக போலீசுக்கு தகவல் அளித்தனர். விரைந்து சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். தாக்குதல் நடத்திய பாலா ரெட்டி மற்றும் அவரது துணை தப்பிச் சென்ற நிலையில், போலீசார் அவர்களை தேடி விரிவான விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தச் சம்பவம் நகரில் பாதுகாப்பு குறைபாடு குறித்து மக்களிடையே பெரும் அதிருப்தி ஏற்படுத்தியுள்ளது. பட்டப்பகலில் நடுரோட்டில் நிகழ்ந்த இந்த தாக்குதல், சட்டம்-ஒழுங்கு மீதான நம்பிக்கையை சீர்குலைக்கும் வகையில் அமைந்துள்ளது என சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
இதையும் படிங்க: ச்சீ... காமத்தின் உச்சம்! பிணத்தை கூட விட்டு வைக்காத வாலிபர்! பிணவறையில் பெண்ணின் சடலத்திடம் செய்த அருவருப்பான செயல்!