×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அம்மா அவுங்களோட டார்ச்சல் தாங்க முடியல...காதல் திருமணம் செய்த 4 மாதத்தில் இளம்பெண் தற்கொலை.! ஒட்டுமொத்ததையும் கடிதத்தில் எழுதிய மகள்... பகீர் பின்னணி.!!!

பெங்களூருவில் திருமணமாகி நான்கு மாதங்களே ஆன தனியார் பள்ளி ஆசிரியை தூக்கிட்டு உயிரிழந்தார். கணவர் குடும்பத்தினரின் துன்புறுத்தலே காரணம் எனக் கூறப்படும் கடிதத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

பெங்களூருவின் காமாக்ஷிபால்யா காவல் எல்லைக்குட்பட்ட சுங்கதகட்டே பகுதியில், 25 வயதான தனியார் பள்ளி ஆசிரியை சுவேதா தனது வீட்டில் தூக்கிட்டு உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணமாகி நான்கு மாதங்களே ஆன நிலையில் நடந்த இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

திருமணமாகி நான்கு மாதங்களில் நேர்ந்த சோகம்

சிக்மகளூரு மாவட்டத்தைச் சேர்ந்த சுவேதா, குணிகல் பகுதியைச் சேர்ந்த மூர்த்தியை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு கணவரின் குடும்பத்தினருடன் வசித்து வந்த அவர், கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு தனது அறையில் உள்ள மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: IAS அதிகாரியின் மகள் வரதட்சணை கொடுமையால் தற்கொலை.. 8 மாதத்தில் கசந்த காதல் திருமணம்.!

தாயாருக்கு எழுதிய கடிதம் விசாரணையில் முக்கிய ஆதாரம்

உயிரிழப்பதற்கு முன்பு தனது தாயாருக்கு எழுதியிருந்த கடிதத்தில், கணவர் மற்றும் நாத்தனாரால் ஏற்பட்ட தொடர் மன உளைச்சலே இந்த முடிவுக்கு காரணம் என சுவேதா குறிப்பிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்தக் கடிதத்தை போலீசார் கைப்பற்றி வழக்கின் முக்கிய ஆதாரமாக ஆய்வு செய்து வருகின்றனர்.

வரதட்சணை கொடுமை குற்றச்சாட்டு

பாதிக்கப்பட்டவரின் தாயார் புஷ்பா அளித்த புகாரில், தனது மகளை கணவர் உடலளவிலும் மனதளவிலும் தொடர்ந்து துன்புறுத்தியதாகவும், கேட்ட வரதட்சணை வழங்கப்பட்ட பிறகும் கூடுதலாக பணம் கேட்டு நெருக்கடி கொடுத்ததாகவும் குற்றம் சாட்டியுள்ளார். இந்த கொடுமையால் சுவேதா பலமுறை தொலைபேசியில் அழுது பேசியதாகவும், வீட்டை விட்டு வெளியேறுமாறு அறிவுறுத்துவதற்குள் இந்த துயர சம்பவம் நடந்துவிட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார். வழக்குப் பதிவு செய்துள்ள காமாக்ஷிபால்யா போலீசார், அனைத்து கோணங்களிலும் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: திரையுலகில் அதிர்ச்சி! அதே ஜூன் 14 தான்... சுஷாந்த் சிங் போலவே என் தங்கையும்....! நடிகை சஞ்சிதா மரணத்தில் சகோதரர் போட்டு உடைத்த பகீர் உண்மை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#bengaluru #பெங்களூரு #School teacher #வரதட்சணை கொடுமை #Suicide case
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story