×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நான்கு நாட்களாக பூட்டி இருந்த வீடு! கதவை தட்டிய வீட்டு உரிமையாளர்.... திறக்காததால் கதவை உடைத்து பார்த்த போலீசுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி! திடுக்கிடும் பின்னணி..!!!

பெங்களூருவில் 18 வயது மகனை தந்தை சுத்தியல், கத்தியால் கொலை செய்ததாகவும், மனைவியை அறையில் பூட்டி வைத்ததாகவும் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

Advertisement

பெங்களூருவில் குடும்பத் தகராறு காரணமாக 18 வயது மகனை அவரது தந்தையே சுத்தியல் மற்றும் கத்தியால் தாக்கிக் கொலை செய்ததாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், மனைவியையும் கொலை செய்ய முயன்றுவிட்டு 4 நாட்களாக அறைக்குள் பூட்டி வைத்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். பத்மநாபநகரில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்பில் நடந்த இந்தக் கொடூர சம்பவம், நவம்பர் 19-ஆம் தேதி போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்றபோது வெளிச்சத்துக்கு வந்தது.

4 நாட்களாக வீட்டுக்குள் பூட்டப்பட்ட பெண்

பெங்களூரு பத்மநாபநகரில் உள்ள ராகவேந்திரா லேஅவுட்டில் அமைந்துள்ள எஸ்.ஆர்.ஆர்.கே துளசி அபார்ட்மென்ட்ஸில் கடந்த நவம்பர் 16-ஆம் தேதி இரவு குடும்பத் தகராறு ஏற்பட்டுள்ளது . சுதீப், அவரது மனைவி சீமா தாஸ் மற்றும் 18 வயது மகன் சோஹம் தாஸ் ஆகியோர் அக்டோபர் 2024 முதல் அந்த வீட்டில் வசித்து வந்துள்ளனர்.

இதையும் படிங்க: இப்படியா ஆகணும்..! ஆசையாக சேலை அணிந்து அரசு விழாவிற்கு வந்த பெண்..! விழா மேடையிலேயே நடந்த சோகம்... கதறும் குடும்பத்தினர்..!!!

கடந்த 6 மாதங்களாக அந்தக் குடும்பத்தில் அடிக்கடி சண்டைகள் நடப்பதாக அண்டை வீட்டாரிடம் இருந்து புகார்கள் வந்ததாக வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார். நவம்பர் 16 இரவும் தகராறு தொடர்பாக புகார் வந்த நிலையில், சுமார் ஒரு மணி நேரத்துக்குப் பிறகு குடியிருப்பு காவலாளியிடம் விசாரித்தபோது வீட்டில் அமைதி நிலவுவதாகத் தெரிவித்துள்ளார்.

கதவை உடைத்து உள்ளே சென்றபோது ரத்தக்கறைகள்

நான்கு நாட்களுக்குப் பிறகு, நவம்பர் 19 அன்று வீட்டு உரிமையாளர் அந்த வீட்டுக்குச் சென்றுள்ளார். காலிங் பெல்லை அழுத்தியும், கதவை நீண்ட நேரம் தட்டியும் யாரும் பதிலளிக்கவில்லை. இதனால் சந்தேகமடைந்த அவர், அக்கம் பக்கத்தினரிடம் விசாரித்து அங்கு வசிக்கும் பெண்ணின் தோழியைத் தொடர்புகொண்டார். இருவரும் போலீசாரிடம் தகவல் தெரிவிக்க முடிவு செய்தனர்.

இரவு 11 மணியளவில் போலீசார் மற்றும் பூட்டு உடைப்பவருடன் வீட்டுக்குச் சென்ற அவர்கள், கதவை உடைத்து உள்ளே நுழைந்தனர். அப்போது தரை மற்றும் சுவர்களில் ரத்தக்கறைகள் இருந்துள்ளது. பூட்டப்பட்டிருந்த அறைக்குள் இருந்து சீமா தாஸ் கூச்சலிடும் சத்தம் கேட்டதையடுத்து, அவரை போலீசார் மீட்டனர்.

குளியலறையில் மகனின் சடலம்

மீட்கப்பட்ட சீமா தாஸ் அளித்த தகவலின்படி, அவரது கணவர் சுதீப் தன்னையும் மகன் சோஹம் தாஸையும் கத்தியாலும் சுத்தியலாலும் தாக்கியுள்ளார். நவம்பர் 16 இரவு 9 மணி முதல் 11 மணிக்குள் இந்தத் தாக்குதல் நடந்ததாக அவர் தெரிவித்துள்ளார். இதில் மகன் கொல்லப்பட்டதாகவும், தன்னையும் கொலை செய்ய கணவர் முயன்றதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

இதையடுத்து, வீட்டின் குளியலறையில் சோஹம் தாஸின் சடலம் கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கொலை மற்றும் கொலை முயற்சி தொடர்பாக பனசங்கரி போலீசார் பாரதிய நியாய சன்ஹிதா (BNS) 2023-ன் பிரிவுகள் 103(1) (கொலை) மற்றும் 109(1) (கொலை முயற்சி) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: எல்லாரும் இறங்கிட்டாங்க..! ஆனால் ஒரு தம்பதி மட்டும் கடைசியாக கீழே இறங்குனாங்க... சந்தேகப்பட்டு பையைத் திறந்த TTE-க்குக் காத்திருந்த அதிர்ச்சி..! வைரல் சம்பவம்..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#பெங்களூரு குடும்ப கொலை #Bengaluru Crime #18 வயது இளைஞர் கொலை #கொலை முயற்சி #Banashankari Police
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story