×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

எல்லாரும் இறங்கிட்டாங்க..! ஆனால் ஒரு தம்பதி மட்டும் கடைசியாக கீழே இறங்குனாங்க... சந்தேகப்பட்டு பையைத் திறந்த TTE-க்குக் காத்திருந்த அதிர்ச்சி..! வைரல் சம்பவம்..!!!

ரயிலில் பயணம் செய்த தம்பதியின் பையில் ரயில்வேக்கு சொந்தமான 2 பெட்சீட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதுதொடர்பான வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

Advertisement

ரயிலில் பயணம் செய்த தம்பதியிடம் சோதனை நடத்திய டிக்கெட் பரிசோதகர், அவர்களின் பையில் ரயில்வேக்கு சொந்தமான இரண்டு பெட்சீட்கள் இருப்பதைக் கண்டுபிடித்தார். மற்ற பயணிகள் அனைவரும் இறங்கிய பிறகு கடைசியாக இறங்கிய தம்பதியின் நடவடிக்கையில் சந்தேகம் ஏற்பட்டதால் பையைச் சோதனை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

பையைத் திறந்து பார்த்தபோது, அதற்குள் ரயில்வேக்கு சொந்தமான இரண்டு பெட்சீட்கள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரியவந்தது. இதையடுத்து, டிக்கெட் பரிசோதகர் அவற்றை மீட்டுள்ளார்.

இதையும் படிங்க: என்ன..? செத்த பொண்ணு கத்துதா..? மின்சார தகன உலைக்குள் வைக்கப்பட்ட சில நொடிகளில் கேட்ட அலறல் சத்தம்..! அதிர்ச்சி வீடியோ..!!!

பையில் இருந்த 2 பெட்சீட்கள்

ரயில் நிலையத்தில் மற்ற பயணிகள் இறங்கிய பிறகு கணவன், மனைவி இருவரும் கடைசியாக இறங்கியுள்ளனர். அவர்களின் நடவடிக்கையில் சந்தேகமடைந்த டிக்கெட் பரிசோதகர், அந்த நபரின் பையைச் சோதனையிட முடிவு செய்தார். பையைத் திறந்தபோது, அதற்குள் இந்திய ரயில்வேக்கு சொந்தமான இரண்டு பெட்சீட்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து, டிக்கெட் பரிசோதகர் தனது செல்போனில் வீடியோ எடுக்கத் தொடங்கியுள்ளார். அப்போது அந்த நபரின் மனைவி, பரிசோதகரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு, இதுபோன்ற அர்த்தமற்ற விஷயங்களைப் பேச வேண்டாம் என கோபமாகக் கூறியுள்ளார். இருப்பினும், பையில் இருந்த இரண்டு பெட்சீட்களையும் பரிசோதகர் மீட்டுக்கொண்டார்.

பொது ஒழுக்கம் குறித்து இணையத்தில் விமர்சனம்

சுமார் 200 அல்லது 300 ரூபாய் மதிப்புள்ள பெட்சீட்களுக்காக இப்படி நடந்துகொள்வது ஏன் என்றும், இதனால் தங்களது மரியாதையையே இழக்க நேரிடுகிறது என்றும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர்.

ரயில்வே பயணிகளுக்கு அரசு பல்வேறு வசதிகளை வழங்கி வரும் நிலையில், அவற்றை முறையாகப் பயன்படுத்துவதுடன் பொதுமக்களிடம் அடிப்படை ஒழுக்கமும் பொது அறிவும் (Civic Sense) இருக்க வேண்டும் எனவும் இணையத்தில் கருத்துகள் பதிவாகி வருகின்றன.

 

இதையும் படிங்க: சொல்லியும் கேட்காத மக்களுக்கு இப்படித்தான் செய்யணும்..! இளைஞர் வைத்த குங்குமத்தின் மகிமையை பாருங்க... தீயாய் பரவும் வீடியோ..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரயில்வே பெட்சீட் #Railway Theft #ரயில் பயணிகள் #Civic Sense #வைரல் வீடியோ
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story