மருத்துவர் வேலைக்கு வராததால் வீட்டுக்கு சென்ற ஊழியர்கள்! ரத்த வெள்ளத்தில் கிடந்த டாக்டர்... படுக்கைஅறையில் ஜாலியாக மனைவி! கட்டிலுக்கு அடியில் துடிதுடித்த 9 வயது மகன்.... பகீர் சம்பவம்.!!!
ஹூக்ளியில் மருத்துவர் கிரண் வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டார். மனைவி பிரியங்கா மொபைலில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்ததும், 9 வயது மகன் காயமடைந்ததும் போலீஸ் விசாரணையை தீவிரப்படுத்தியுள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த மருத்துவர் கிரண், ஹூக்ளி பகுதியில் உள்ள தனது வீட்டில் கொலை செய்யப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதே வீட்டில் அவரது மனைவி பிரியங்கா எந்த பதற்றமும் இன்றி மொபைலில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்ததும், 9 வயது மகன் பலத்த காயங்களுடன் கிடந்ததும் போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
பணிக்கு வராததால் வீட்டுக்குச் சென்ற ஊழியர்கள்
மயக்கவியல் நிபுணரான மருத்துவர் கிரண் மற்றும் அவரது மனைவி, கண் மருத்துவ நிபுணரான பிரியங்கா இருவரும் மறுமணம் செய்து கொண்டு, தங்களது 9 வயது மகனுடன் ஹூக்ளி பகுதியில் வசித்து வந்தனர். கடந்த ஜூலை 15-ஆம் தேதி கிரண் மருத்துவமனைக்கு பணிக்கு வராததால், ஊழியர்கள் அவரது வீட்டுக்குச் சென்று பார்த்தனர். அப்போது வீட்டின் கதவு திறந்திருந்த நிலையில், விருந்தினர் அறையில் மருத்துவர் கிரண் ரத்த வெள்ளத்தில் உயிரிழந்த நிலையில் கிடந்தார்.
இதையும் படிங்க: அக்கா கதவை திற ரொம்ப பயமா இருக்கு! கதவை உடைத்து பார்த்தவர்களுக்கு பேரதிர்ச்சி.. கன்னியாகுமரியில் நடந்த பயங்கரம்!
படுக்கையறையில் மனைவி... கட்டிலுக்கு அடியில் மகன்
இதையடுத்து வீட்டின் மற்ற அறைகளைப் பார்த்தபோது, படுக்கையறையில் பிரியங்கா எந்த கவலையும் இல்லாதது போல் மொபைலில் ரீல்ஸ் பார்த்துக்கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. அதே அறையில் கட்டிலுக்கு அடியில் அவர்களின் 9 வயது மகன் பலத்த காயங்களுடன் மயங்கிக் கிடந்தது அங்கு இருந்தவர்களை அதிர்ச்சியடையச் செய்தது.
மனைவியின் நடவடிக்கையால் எழுந்த சந்தேகம்
வீட்டில் இவ்வளவு பெரிய கொடூரம் நடந்திருந்த நிலையிலும், எதுவும் நடக்காதது போல் பிரியங்கா நடந்து கொண்டதாக கூறப்படும் தகவல் விசாரணைக்கு புதிய திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. தகவலறிந்து வந்த போலீசார் வீட்டை ஆய்வு செய்து, பிரியங்கா உள்ளிட்டோரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். சம்பவத்தின் முழு பின்னணி மற்றும் கொலைக்கான காரணம் குறித்து தீவிரமாக விசாரணை நடைபெற்று வருகிறது.