காலம் கலிகாலம்மா போச்சு.... உறவை மீறிய தாகாத உறவு! 40 வயது மாற்றாந்தாய்க்கும் 21 வயது மகனுக்கும் உறவு... வெளிச்சத்துக்கு வந்ததும் அடுத்தடுத்த நடந்த அதிர்ச்சி! போலீசார் மீட்டதும் கண்ட கொடூரம்..!!!
மகாராஷ்டிராவில் காதல் உறவு சர்ச்சையால் 21 வயது இளைஞர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், அதிர்ச்சியடைந்த மாற்றாந்தாயும் மருத்துவமனை வளாகத்தில் தற்கொலை செய்து கொண்டார்.
மகாராஷ்டிராவில் மாற்றாந்தாய் மற்றும் மகன் இடையே ஏற்பட்டதாகக் கூறப்படும் காதல் உறவு சோக முடிவை சந்தித்துள்ளது. உறவு வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து 21 வயது இளைஞர் விஷம் குடித்து உயிரிழந்த நிலையில், அவரது மரணச் செய்தியால் அதிர்ச்சியடைந்த மாற்றாந்தாயும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கேஜ் தாலுகாவைச் சேர்ந்த சாஹேப்ராவ் பவாரின் மகன் அனில் பவார் (21) மற்றும் அவரது 40 வயது மாற்றாந்தாய் அனிதா ஆகியோருக்கு இடையே காதல் உறவு இருந்ததாக கூறப்படுகிறது. சமூகக் கட்டுப்பாடுகளை மீறிய இந்த உறவு குறித்து குடும்பத்தினருக்கு தெரியவந்ததைத் தொடர்ந்து பல்வேறு பிரச்சினைகள் எழுந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தெலுங்கானாவுக்கு தப்பிச் சென்ற இருவர்
சில நாட்களுக்கு முன்பு அனில் மற்றும் அனிதா இருவரும் வீட்டை விட்டு வெளியேறி தெலுங்கானாவுக்கு சென்றனர். அவர்களைத் தேடிய குடும்பத்தினரும் போலீசாரும், மொபைல் சிக்னல் உதவியுடன் அவர்களின் இருப்பிடத்தை கண்டறிந்து மீட்டு வந்தனர்.
இதையும் படிங்க: திருமணம் செய்யாமல் 10 ஆண்டுகளாக ஒரே வீட்டில் வாழ்ந்த கள்ளக்காதலர்கள்! திடீரென உண்டான சந்தேகம்! அடுத்தடுத்து நடந்த பயங்கரம்!
விஷம் குடித்த இளைஞர் உயிரிழப்பு
தகவலின்படி, தங்களது உறவு வெளியில் தெரிந்துவிட்டதால் ஏற்பட்ட அவமானம் மற்றும் பழிச்சொல்லால் மனஉளைச்சலுக்கு ஆளான அனில் விஷம் குடித்ததாக கூறப்படுகிறது. ஆபத்தான நிலையில் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், நான்கு நாட்கள் தீவிர சிகிச்சை பெற்றபோதும் உயிரிழந்தார்.
மருத்துவமனை வளாகத்தில் அனிதா தற்கொலை
அனிலின் மரணச் செய்தியை அறிந்த அனிதா கடும் அதிர்ச்சியடைந்தார். அதன்பின் அதே மருத்துவமனை வளாகத்தில் இருந்த மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இருவரின் உடல்களையும் மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தின் பின்னணி மற்றும் சூழ்நிலைகள் குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: ஒரு நொடி ஆத்திரத்தில் நொறுங்கிய குடும்பம்! தந்தையே எமனாக மாறிய அவலம்.....இறுதியில் நடந்த அதிர்ச்சி!!!