×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நாற்காலியை நகர்த்தியதில் தகராறு… மாணவியை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!

நாற்காலியை நகர்த்தியதில் தகராறு… மாணவியை சரமாரியாக தாக்கிய சக மாணவன்.. அதிர்ச்சி வீடியோ!

Advertisement

கர்நாடக மாநிலத்தில் உள்ள ஒரு கல்லூரியில், வகுப்பறையில் நாற்காலியை நகர்த்துவது தொடர்பாக மாணவர்களிடையே ஏற்பட்ட வாக்குவாதம் கடும் மோதலாக மாறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்தச் சம்பவத்தில் மாணவி ஒருவர் சக மாணவனால் தாக்கப்பட்டு மயங்கி விழுந்த காட்சி, வகுப்பறையில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வகுப்பறையில் நாற்காலியை முன்னோக்கி நகர்த்துவது தொடர்பாக மாணவர்களுக்கிடையே முதலில் வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. அப்போது சில மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாணவியை கேலி செய்து கிண்டல் செய்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த மாணவி அவர்களில் ஒரு மாணவனை நோக்கிச் சென்று தாக்க முயன்றதாகவும் தெரிகிறது.

இதனைத் தொடர்ந்து, அந்த மாணவன் மாணவியை எதிர்பாராத விதமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்து பலமாக தாக்கப்பட்டதில் நிலைதடுமாறிய மாணவி, வகுப்பறையிலேயே மயங்கி கீழே விழுந்தார். இதைக் கண்ட சக மாணவர்கள் அதிர்ச்சியடைந்து உடனடியாக அவரைச் சுற்றி திரண்டு, உதவ முயன்றனர்.

இதையும் படிங்க: கடன் தொகையை கேட்டு பெண்ணை கடத்தி தாக்குதல்! ஆடைகளை அகற்றி வீடியோ.. பெங்களூருவில் அதிர்ச்சி!

பின்னர் காயமடைந்த மாணவி உடனடியாக மீட்கப்பட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டார். அங்கு அவருக்கு தேவையான சிகிச்சை அளிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.மேலும், மோதலில் ஈடுபட்ட மாணவர்களிடம் விசாரணை நடத்தப்பட்டு வருவதுடன், சம்பவத்துக்கான முழுமையான காரணம் குறித்தும் விசாரிக்கப்பட்டு வருகிறது.

குறிப்பாக, வகுப்பறையில் பதிவான சிசிடிவி காட்சிகளை போலீஸார் ஆய்வு செய்து, மோதல் எவ்வாறு தொடங்கியது, மாணவியை தாக்கியதில் யார் யாருக்கு தொடர்பு உள்ளது என்பதையும் கண்டறியும் பணியில் ஈடுபட்டுள்ளனர். நாற்காலியை நகர்த்திய விவகாரத்தில் தொடங்கிய சாதாரண வாக்குவாதம், மாணவி ஒருவர் மயங்கி விழும் அளவுக்கு தாக்குதல் சம்பவமாக மாறியது கல்லூரி மாணவர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: காதலியை ரகசியமாக சந்திக்க இரவில் சென்ற இளைஞர்… மறுநாள் மணமகனான அதிர்ச்சி சம்பவம்!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#karnataka #college students #Bench problem #College fight
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story