×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வங்கிக்கு போகப்போறீங்களா? இந்த 4 நாட்கள் கவனம்.. வாடிக்கையாளர்களே தெரிஞ்சிக்கோங்க.. போராட்டம் இது போராட்டம்.!

SBI Customer Alert: வங்கிகள் கீழ்காணும் நான்கு நாட்கள் விடுமுறையில் இருக்கும் என்பதால், முன்கூட்டியே பணம் செலுத்துதல் / பெறுதலை திட்டமிடுவது நல்லது.

Advertisement

4 நாட்கள் எஸ்.பி.ஐ. வாங்கி செயல்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

போராட்டம் உறுதி:

State Bank of India Strike Date 2026: ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா, இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வாங்கி ஆகும். இங்கு பணியாற்றி வரும் ஊழியர்கள் நீண்டகாலமாக 2026 மே மாதம் 25 மற்றும் 26ம் தேதிகளில் தேசிய அளவில் போராட்டம் நடத்தவிருப்பதாகவும், இந்த நாட்கள் பணிக்கு யாரும் வரமாட்டோம் எனவும் கூறி வந்தனர். இதனிடையே, இவர்களின் போராட்டம் தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இந்த பேங்குகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா.? அப்போ சிரமம் தான்.!

வேலை நிறுத்தம் அறிவிப்பு:

தேசிய அளவில் பேங்க் ஆப் இந்திய கூட்டமைப்பு, தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த வேலை நிறுத்தம் மே 25, 26 ஆகிய தேதிகளில் நாடுதழுவிய அளவில் நடக்கிறது. அதனைத்தொடர்ந்து மே 23ம் தேதி இரண்டாம் சனிக்கிழமை, மே 24ல் ஞாயிற்றுக்கிழமை என மொத்தமாக 4 நாட்கள் எஸ்.பி.ஐ. வங்கிக்கிளைகள் மூடப்பட்டு இருக்கும்.   

16 அம்ச கோரிக்கை:

சம்பளம், ஓய்வூதியத்தில் இருக்கும் ஏற்றத்தாழ்வை சரிசெய்ய வலியுறுத்தியும் பலன் இல்லாததால் தற்போது வேலை நிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது. பணி பாதுகாப்பு, நிலைத்தன்மைக்கும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. நிரந்தர வேலை, NPS ஊழியர்களுக்கும் ஓய்வூதிய நிதி மேலாளர் மாற்று வாய்ப்பு, ஆயுதம் இந்திய பாதுகாவலர்களுக்கான புதிய ஆட்செர்பு, 2019 க்குப்பின் பணியில் சேர்ந்த ஊழியர்களுக்கு வட்டங்களுக்கு இடமாற்றம் வசதி, ஊழியர்கள் மீதான குறுக்கு விற்பனை அழுத்தம் குறைக்கப்பட வேண்டும் என 16 அம்ச கோரிக்கையை வலியுறுத்தி வேலைநிறுத்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனால் மே 23, 24, 25, 26 தேதிகளில் பணம் செலுத்துதல் / எடுத்தல் போன்ற வங்கிப்பணிகளை முன்கூட்டியே திட்டமிடுவது நல்லது.

இதையும் படிங்க: தங்கப்பிரியர்களுக்கு பேரிடி.. ரூ.1 லட்சத்தை நோக்கி தங்கம்.. வெள்ளி விலையும் தாறுமாறு உயர்வு.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #bank strike #sbi #ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா #வேலைநிறுத்தம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story