இந்த பேங்குகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா.? அப்போ சிரமம் தான்.!
இந்த பேங்குகளில் உங்களுக்கு அக்கவுண்ட் இருக்கா.? அப்போ சிரமம் தான்.!
நம் நாட்டில் வங்கி துறையானது நாம் நினைப்பதை விட மிகப் பெரியது. கடந்த காலங்களை போல அரசு மீண்டும் இந்தியாவில் இருக்கும் வங்கிகள் அனைத்தையும் இணைக்க முயற்சித்து வருகின்றது. நிதி ஆயோக்கின் பரிந்துரைகளின் பேரில்தான் இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போது வெளியாகியிருக்கும் தகவலின்படி வரும் காலத்தில் இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் மத்திய வங்கி, இந்தியன் வங்கி மற்றும் மகாராஷ்டிரா வங்கி ஆகிய 4 சிறிய வங்கிகள் பஞ்சாப் நேஷனல் வங்கி, பேங்க் ஆஃப் பரோடா மற்றும் ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவற்றுடன் இணைக்கபடலாம். எனவே, இந்த வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் நபர்கள் இந்த இணைப்பின் காரணமாக சிரமங்களை சந்திக்க நேரிடலாம்.
உதாரணமாக வாடிக்கையாளர்கள் தங்களது பாஸ்புக், காசோலை புத்தகங்கள், ஏடிஎம் கார்டு போன்றவற்றில் மாற்றங்களை செய்ய வேண்டி இருக்கலாம். முன்னதாக 2017 மற்றும் 2020-ல் அரசு 10 பொதுத்துறை வங்கிகளை இணைத்தது. அப்போது வங்கிகளின் எண்ணிக்கை 27-ல் இருந்து 12 ஆக குறைந்தது.
இவ்வாறு, சிறிய வங்கிகளை பெரிய வங்கிகளுடன் இணைப்பதால் வங்கி அமைப்பு பலப்படுத்தப்படும் என்று அரசு கூறுகிறது. மேலும், கடன் வழங்கும் எண்ணிக்கையும் அதிகரிக்குமாம். சிறிய வங்கிளை பெரிய வங்கிகளுடன் இணைத்து விட்டால் வங்கிகள் மீதான அழுத்தமும், பராமரிப்பு செலவும் குறையும் என்று கூறப்படுகிறது.