×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

ஒரே இரவில் மொத்த குடும்பமும் காலி! மொட்டை மாடி, படிக்கட்டுகள், கட்டுலுக்கு அடியில் கிடந்த உடல்கள்... மிரண்டு போன போலீஸ்! ஓய்வுபெற்ற ஆசிரியர் குடும்பத்தில் நடந்தது என்ன? பகீர் சம்பவம்!!!

வங்கதேசத்தின் ரங்பூரில் பூட்டிய வீட்டுக்குள் ஓய்வுபெற்ற ஆசிரியர் உள்ளிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். கொள்ளை காரணமா என விசாரணை.

Advertisement

வங்கதேசத்தின் ரங்பூர் நகரில் பூட்டிய வீட்டுக்குள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொடூரமாக கொலை செய்யப்பட்ட நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். ஓய்வுபெற்ற பள்ளி ஆசிரியர் கணபதி சக்ரவர்த்தி, அவரது மனைவி, மகள் மற்றும் 12 வயது மகன் ஆகியோர் உயிரிழந்துள்ளனர். வீட்டில் இருந்த பொருட்கள் சிதறிக் கிடந்ததால், கொள்ளை முயற்சியில் கொலை நடந்திருக்கலாம் என போலீசார் சந்தேகிக்கின்றனர்.

தொலைபேசிகள் அணைக்கப்பட்டதால் உறவினர்களுக்கு சந்தேகம்

ரங்பூர் நகரில் உள்ள தாஸ்பாறை பகுதியில் கணபதி சக்ரவர்த்தி (65), அவரது மனைவி பிரீதிலதா (50), மகள் ஆகமி (23), மகன் பிரியம் (12) ஆகியோர் வசித்து வந்தனர். கடந்த வியாழக்கிழமை முதல் நால்வரின் தொலைபேசிகளும் அணைக்கப்பட்டிருந்தன. இதனால் சந்தேகமடைந்த உறவினர்கள் சனிக்கிழமை இரவு வீட்டுக்கு நேரில் சென்று பார்த்துள்ளனர்.

இதையும் படிங்க: அய்யோ... கடவுளே! மனைவியின் வாட்ஸ்அப் மெசேஜைப் பார்த்து அலறி அடித்து ஓடிய கணவன்! இறுதியில் காத்திருந்த டுவிஸ்ட்..!!!

அப்போது வீடு பூட்டப்பட்டிருந்ததுடன், உள்ளே விளக்குகளும் எரியவில்லை. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. தகவலின்பேரில் அங்கு சென்ற போலீசார், கதவின் பூட்டை உடைத்து வீட்டுக்குள் நுழைந்தனர்.

வீட்டின் வெவ்வேறு இடங்களில் 4 பேரின் சடல்கள்

வீட்டுக்குள் சென்ற போலீசாருக்கு அதிர்ச்சி காத்திருந்தது. மொட்டை மாடி, படிக்கட்டு மற்றும் கட்டிலுக்கு அடியில் என வெவ்வேறு இடங்களில் நால்வரின் சடலங்களும் கிடந்தன. உடல்களை மீட்ட போலீசார், பிரேதப் பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

கொள்ளைக்காக கொலை நடந்ததா? தீவிர விசாரணை

வீட்டில் இருந்த பொருட்கள் பல இடங்களில் சிதறிக் கிடந்தன. இதனால் நகை, பணத்தை கொள்ளையடிக்கும் நோக்கில் குடும்பத்தினரை கழுத்தை நெரித்து கொலை செய்திருக்கலாம் என போலீசார் முதற்கட்டமாக சந்தேகிக்கின்றனர். இருப்பினும் கொலைக்கான முழுமையான காரணம் இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ரங்பூர் குடும்பக் கொலை தொடர்பாக சிறப்புப் புலனாய்வுக் குழுவினர் வழக்குப் பதிவு செய்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர். வங்கதேசத்தில் இந்துக்கள் உள்ளிட்ட சிறுபான்மையினர் தொடர்பான பாதுகாப்பு குறித்த கவலைகள் நிலவி வரும் நிலையில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் கொல்லப்பட்டிருப்பது அப்பகுதியில் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: என் மகளை கொன்ன உங்க யாரையும் சும்மா விட மாட்டேன்! 3 மாத கர்ப்பிணி அதிகாரியின் மரணத்தில் வெடித்த குடும்பத்தின் கொடுமை!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரங்பூர் கொலை #Bangladesh Murder #கணபதி சக்ரவர்த்தி #Family Murder #போலீஸ் விசாரணை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story