மோமோஸ் சாப்பிட்ட கொஞ்சம் நேரத்தில் வயிற்று வலி! இரண்டு பிஞ்சு குழந்தைகள் உயிரிழப்பு.... பள்ளி விடுதியில் நடந்தது என்ன? அதிர்ச்சி சம்பவம்!!!
உத்தரபிரதேசத்தின் பாண்டாவில் மோமோஸ் சாப்பிட்ட விடுதிப் பள்ளி மாணவர்கள் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டதில் 2 சிறுவர்கள் உயிரிழந்தனர்; போலீசார் விசாரணை.
உத்தரபிரதேச மாநிலம் பாண்டா மாவட்டத்தில் உள்ள பிஎல் வித்யா மந்திர் தனியார் விடுதிப் பள்ளியில் மோமோஸ் சாப்பிட்ட மாணவர்களுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. கடுமையான வயிற்று வலியால் பாதிக்கப்பட்ட இரு சிறுவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். மேலும் ஒரு மாணவர் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார்.
மோமோஸ் சாப்பிட்ட சிறிது நேரத்தில் பாதிப்பு
நகரக் காவல் எல்லைக்குட்பட்ட பள்ளியில் தங்கிப் படித்து வந்த மாணவர்கள், இரவு நேரத்தில் மோமோஸ் சாப்பிட்டதாக கூறப்படுகிறது. அதன்பிறகு சில மாணவர்களுக்கு கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட உடல்நலப் பாதிப்புகள் ஏற்பட்டன. நிலைமை மோசமடைந்ததால் பள்ளி நிர்வாகத்தினர் மாணவர்களை மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதையும் படிங்க: 1 இல்ல.. 2 இல்ல.. கருப்பையில் இருந்த 500 கட்டிகள்! 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்.... மறுபிறவி எடுத்த பெண்!!!
மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே 12 வயதான நிதின் என்ற மாணவன் பரிதாபமாக உயிரிழந்தான். இதையடுத்து, 8 வயதான அருண் என்ற சிறுவன் மேல்சிகிச்சைக்காக மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். ஆனால், அங்கு சிகிச்சை பலனின்றி அவரும் உயிரிழந்தார்.
மற்றொரு மாணவருக்கு தீவிர சிகிச்சை
மேலும் ஒரு சிறுவன் மாவட்ட அரசு மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உடல்நிலை குறித்து மருத்துவர்கள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். தகவல் அறிந்த பெற்றோர் மருத்துவமனைக்கு விரைந்து வந்து நிலைமையை கேட்டறிந்தனர்.
விடுதி நடத்த அனுமதி இல்லையா?
தகவல் கிடைத்ததும் ஏஎஸ்பி சிவராஜ் தலைமையிலான போலீசார் பள்ளிக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில், பிஎல் வித்யா மந்திர் பள்ளிக்கு வகுப்புகள் நடத்துவதற்கான அனுமதி மட்டுமே இருந்ததாகவும், அதே வளாகத்தில் விதிமுறைகளை மீறி விடுதி நடத்தப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
பள்ளி நிர்வாகத்தின் அலட்சியமே மாணவர்களின் உயிரிழப்புக்கு காரணம் என பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர். இதனிடையே உயிரிழந்த மாணவர்களின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளன. மாணவர்கள் உயிரிழப்பு தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வரும் நிலையில், உணவு பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடைபெற்று வருகிறது.
பள்ளியில் வழங்கப்பட்ட உணவின் மாதிரிகள் மற்றும் பிற விவரங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது. மோமோஸ் உணவு பாதிப்பு காரணமாகவே மாணவர்களின் உடல்நிலை மோசமடைந்ததா என்பது விசாரணை மற்றும் மருத்துவப் பரிசோதனை முடிவுகளுக்குப் பிறகே உறுதி செய்யப்படும்.
இதையும் படிங்க: திருமணமாகி 6 மாதம் தான்... மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவர் கண்ட ஷாக்…! இத எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு... பகீர் சம்பவம்!!!