×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

1 இல்ல.. 2 இல்ல.. கருப்பையில் இருந்த 500 கட்டிகள்! 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பின்.... மறுபிறவி எடுத்த பெண்!!!

ஆக்ரா மருத்துவமனையில் பெண்ணின் கருப்பையில் இருந்த 500-க்கும் மேற்பட்ட ஃபைப்ராய்டு கட்டிகள், கருப்பையைப் பாதுகாத்து நவீன ரோபோடிக் சிகிச்சை மூலம் அகற்றப்பட்டன.

Advertisement

ஆக்ராவில் உள்ள டாக்டர் கம்லேஷ் டாண்டன் மருத்துவமனையின் IVF மற்றும் ரோபோடிக் அறுவை சிகிச்சை மையத்தில் அரிதான மருத்துவ சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது. கடுமையான வயிற்று வலி மற்றும் உடல் உபாதைகளால் அவதிப்பட்டு வந்த பெண்ணின் கருப்பையில் இருந்த 500-க்கும் மேற்பட்ட ஃபைப்ராய்டு கட்டிகளை மருத்துவர்கள் வெற்றிகரமாக அகற்றினர். மூத்த மகப்பேறு மருத்துவர் டாக்டர் அமித் டாண்டன் தலைமையிலான குழுவினர், சுமார் 5 மணி நேரம் நீடித்த அறுவை சிகிச்சையை மேற்கொண்டனர்.

கருப்பையைப் பாதுகாத்து கட்டிகள் அகற்றம்

நோயாளியின் கருப்பையை அகற்றாமல், கட்டிகளை மட்டும் தனித்தனியாக அகற்றுவது மருத்துவக் குழுவுக்கு மிகப்பெரிய சவாலாக இருந்தது. அதிக எண்ணிக்கையிலான கட்டிகள் இருந்ததால் அறுவை சிகிச்சையின்போது ரத்த இழப்பை கட்டுப்படுத்துவதும் முக்கியமானதாக இருந்தது.

இதையும் படிங்க: திருமணமாகி 6 மாதம் தான்... மனைவிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க வந்த கணவர் கண்ட ஷாக்…! இத எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு... பகீர் சம்பவம்!!!

இதையடுத்து, நவீன லேப்ராஸ்கோபிக் மற்றும் ரோபோடிக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி மருத்துவர்கள் சிகிச்சையை மேற்கொண்டனர். கவனமாக செயல்பட்டு, கருப்பையைப் பாதுகாத்தபடியே 500-க்கும் மேற்பட்ட ஃபைப்ராய்டு கட்டிகள் அகற்றப்பட்டன. சுமார் 5 மணி நேரம் நடைபெற்ற அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நிறைவடைந்தது.

நீண்ட கால வலியில் இருந்து நிவாரணம்

நீண்ட நாட்களாக கடுமையான வயிற்று வலி உள்ளிட்ட உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருந்த அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சைக்குப் பிறகு நிவாரணம் கிடைத்துள்ளது. கருப்பையைப் பாதுகாத்து சிக்கலான சிகிச்சையை வெற்றிகரமாக மேற்கொண்ட மருத்துவக் குழுவினருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

குறிப்பாக, இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான ஃபைப்ராய்டு கட்டிகளை அகற்றியபோதும் கருப்பையைப் பாதுகாத்தது இந்த சிகிச்சையின் முக்கிய அம்சமாக பார்க்கப்படுகிறது. ரோபோடிக் அறுவை சிகிச்சை உள்ளிட்ட நவீன மருத்துவத் தொழில்நுட்பங்களின் உதவியுடன் சிக்கலான சிகிச்சையையும் வெற்றிகரமாக மேற்கொள்ள முடியும் என்பதை இந்த அறுவை சிகிச்சை எடுத்துக்காட்டியுள்ளது.

 

இதையும் படிங்க: அடச்சீ... இப்படி ஒரு புருஷனா? ஹனிமூன் வந்த இடத்தில் மனைவிக்கு வந்த மாதவிடாய்….. அடுத்தடுத்து நடந்த அதிர்ச்சி! 45 நாட்களில் முடிந்த வாழ்க்கை…. பகீர் சம்பவம்…!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ஆக்ரா மருத்துவமனை #Fibroid Surgery #ரோபோடிக் அறுவை சிகிச்சை #டாக்டர் அமித் டாண்டன் #கருப்பை கட்டிகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story