×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மனைவிகளுக்கு அடித்த ஜாக்பட்... இனி யாரும் ஏமாற்ற மாட்டாங்க! அரசு ஊழியர்களின் சம்பளத்தில் 20% கட்.... அமலுக்கு வரும் அதிரடி சட்டம்...!!!

அசாமில் முதல் மனைவியை விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்யும் அரசு ஊழியர்களுக்கு கடும் நடவடிக்கை; முதல் மனைவிக்கு 20% ஊதியம் வழங்க புதிய விதி.

Advertisement

அசாம் மாநில அரசு ஊழியர்கள், முதல் மனைவியை சட்டரீதியாக விவாகரத்து செய்யாமல் இரண்டாவது திருமணம் செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் ஹிமந்தா பிஸ்வா சர்மா அறிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட முதல் மனைவி அரசிடம் புகார் அளித்தால், ஊழியரின் மாத ஊதியத்தில் இருந்து 20 சதவீதம் பிடித்தம் செய்யப்படும். அந்தத் தொகை நேரடியாக அவரது வங்கிக் கணக்கில் செலுத்தப்படும்.

விவாகரத்து வழக்கு முடியும்வரை 20% ஊதியம்

விவாகரத்து தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கும் காலத்தில், முதல் மனைவி பொருளாதார ரீதியாக பாதிக்கப்படாமல் இருப்பதை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் நோக்கம். நீதிமன்றம் இறுதித் தீர்ப்பு வழங்கும் வரை ஊதியப் பிடித்தம் தொடரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: இன்ஸ்டாகிராம் பழக்கத்தால் விபரீதம்.. 14 வயது சிறுமி கூட்டுப்பாலியல் வன்கொடுமை.! 

பலதார மணத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை

விவாகரத்து பெறாமலேயே மனைவியை தவிக்கவிட்டு இரண்டாவது திருமணம் செய்வது தொடர்பாக அரசு ஊழியர்கள் மீது தொடர்ந்து புகார்கள் வந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, அரசு ஊழியர்களின் இரண்டாவது திருமணம் தொடர்பாக கடுமையான கட்டுப்பாடுகளை அமல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

தனியார் துறைக்கும் பாதுகாப்பு வழங்க திட்டம்

அரசு ஊழியர்களைத் தொடர்ந்து, தனியார் நிறுவனங்களில் பணிபுரியும் ஆண்களால் பாதிக்கப்படும் பெண்களுக்கும் இதேபோன்ற சட்ட மற்றும் பொருளாதார பாதுகாப்பை வழங்குவது குறித்து அசாம் அரசு பரிசீலித்து வருகிறது. இதன் மூலம் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு 20 சதவீத ஊதியப் பாதுகாப்பு கிடைக்கும் வகையில் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

அசாமில் 2016-ஆம் ஆண்டு முதல் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. 2021-ஆம் ஆண்டு முதல் ஹிமந்தா பிஸ்வா சர்மா முதலமைச்சராக பதவி வகித்து வருகிறார். பலதார மணத்தை கட்டுப்படுத்தும் வகையில் அரசு தற்போது எடுத்துள்ள இந்த முடிவு, அடுத்தகட்டத்தில் தனியார் துறைக்கும் விரிவுபடுத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

இதையும் படிங்க: வெப்சீரிஸ் பார்த்து கொள்ளை, கொலை.. தாய் - மகன் செய்யிற வேலையா இது? தெலுங்கானாவில் திடுக்கிடவைக்கும் உண்மை.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#அசாம் அரசு #Himanta Biswa Sarma #அரசு ஊழியர்கள் #second marriage #ஊதிய பிடித்தம்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story