×
 
☰
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெற்றோர்களே உஷார்! விளையாடும் போது கீழே விழுந்த 2 வயது குழந்தை! முகத்தில் பட்ட காயத்தை நக்கிய தெருநாய்...! அடுத்த நாளே குழந்தை செய்த அதிர்ச்சி செயல்... பரிதாபமாக உயிரிழந்த மகன்..!!!

ஆந்திராவில் முகக் காயத்தை தெருநாய் நக்கியதால் ரேபிஸ் தொற்றுக்குள்ளான 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement

ஆந்திர மாநிலம் பல்நாடு மாவட்டத்தில் தெருநாய் நக்கியதால் ரேபிஸ் தொற்றுக்குள்ளான 2 வயது குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது. பொக்குராம் கிராமத்தில் நடந்த இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. முகத்தில் ஏற்பட்ட சிறிய காயம் மூலம் நோய் பரவியதாக கூறப்படுகிறது.

காயத்தை நக்கிய தெருநாய்

ஈபூரு மண்டலத்தைச் சேர்ந்த பொக்குராம் கிராமத்தில் சோஹன் ருத்ரான்ஷ் என்ற 2 வயது குழந்தை வீட்டுக்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக கீழே விழுந்ததில் முகத்தில் சிறிய காயம் ஏற்பட்டுள்ளது. அந்த நேரத்தில் அங்கு வந்த தெருநாய், குழந்தையின் காயத்தை நக்கியதாக கூறப்படுகிறது. இதை பெற்றோர் கவனிக்கவில்லை.

இதையும் படிங்க: இரவில் வீட்டை விட்டு வெளியே போன 14 வயது சிறுமி! தேடி அழைத்து வந்த பெற்றோர்... விடிந்ததும் வீட்டில் பெற்றோர்க்கு காத்திருந்த பேரதிர்ச்சி! நடந்தது என்ன? பகீர் சம்பவம்...!!!

தண்ணீரைக் கண்டு பயந்த குழந்தை

சில நாட்கள் கழித்து குழந்தையின் நடத்தையில் திடீர் மாற்றம் ஏற்பட்டது. குறிப்பாக தண்ணீரைக் கண்டதும் குழந்தை பயந்து அலறியதுடன், நீரைக் குடிக்கவும் மறுத்துள்ளது. இதையடுத்து பெற்றோர் உடனடியாக குழந்தையை நரசராவ்பேட்டை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

தீவிர சிகிச்சையிலும் உயிரைக் காப்பாற்ற முடியவில்லை

அங்கு முதற்கட்ட சிகிச்சை அளிக்கப்பட்ட பின்னர், மேல் சிகிச்சைக்காக குண்டூர் மருத்துவமனைக்கு குழந்தை மாற்றப்பட்டது. பரிசோதனையில் குழந்தைக்கு ரேபிஸ் தொற்று ஏற்பட்டிருப்பது மருத்துவர்களால் உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், குழந்தையின் உடல்நிலை தொடர்ந்து மோசமடைந்தது.

இறுதியில் சிகிச்சை பலனின்றி சோஹன் ருத்ரான்ஷ் உயிரிழந்தான். தெருநாய் கடிக்காமல் காயத்தை நக்கியதன் மூலம் ரேபிஸ் பாதிப்பு ஏற்பட்டதாக கூறப்படும் இந்த சம்பவம், நாய் தொடர்பான சிறிய காயங்களைக்கூட அலட்சியம் செய்யக்கூடாது என்பதன் அவசியத்தை உணர்த்தியுள்ளது.

 

இதையும் படிங்க: கள்ளக்காதல் விவகாரத்தில் கொடூர முடிவு..! பெற்ற தாயை கொன்ற மகள்.. மகனின் வாக்குமூலத்தால் வெளிவந்த அதிர்ச்சி உண்மை..!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#ரேபிஸ் #Rabies #தெருநாய் #Andhra Pradesh #2 வயது குழந்தை
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story