×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

கணவன், மாமியாருக்கு எமனாக கள்ளக்காதல் மோகம்.. பாசக்கயிறு மிஸ்ஸானதால் தப்பித்த உயிர்கள்.!

Crime News Today: ஆந்திராவில் கள்ளக்காதலுக்கு இடையூறாக இருந்த கணவன், மாமியாரை பெண் கொலை செய்ய முயற்சித்த சம்பவம் நடந்துள்ளது. 

Advertisement

17 வயது சிறுவனுடன் கொண்ட கள்ளக்காதலுக்காக பெண் எடுத்த விபரீதம் தெரியவந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

கொலை முயற்சி சம்பவம்:

ஆந்திரப் பிரதேசம் மாநிலம் சித்தூர், சாமந்திபுரம் பகுதியில் வசித்து வரும் 37 வயதுடைய பெண் கவிதா. இவர் தன்னுடன் கள்ளக்காதல் உறவு கொண்டிருந்த 17 வயது சிறுவனை பயன்படுத்தி, கணவர் மற்றும் மாமியாரை கொலை செய்ய முயன்றதாக அதிர்ச்சி தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கில் சிறுவன் கைது செய்யப்பட்டு இருக்கிறார், தலைமைறைவான பெண்ணுக்கு வலைவீசப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: "தனிமையில் உல்லாசம்..." மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய வக்கீல்.!! 4 பேர் கைது.!!

கள்ளக்காதல் பழக்கம்:

கவிதா கடந்த 17 ஆண்டுகளுக்கு முன்பு விஜய் என்பவரை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிக்கு 15 வயதுடைய இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த சில மாதங்களாக, கவிதாவுக்கும் அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவனுக்கும் இடையே தகாத தொடர்பு இருந்து வந்துள்ளது. சிறுவன் என்பதால் அக்கம்பக்கத்தினருக்கு பெரிதாக சந்தேகம் எழவில்லை என்றும், இதை அவர்கள் பயன்படுத்திக் கொண்டதாகவும் கூறப்படுகிறது.

மனைவியின் விபரீத திட்டம்:

ஒரு கட்டத்தில், தனது மனைவிக்கும் சிறுவனுக்கும் இடையிலான உறவை கணவர் விஜய் கண்டுபிடித்து, கவிதாவை கடுமையாக கண்டித்துள்ளார். இதனால் குடும்பத்தில் பிரச்சனை உண்டாகிய நிலையில், கவிதா தனது உறவுக்கு இடையூறாக இருப்பதாக கருதி, கணவரையும் மாமியார் நிர்மலாவையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்துள்ளார். 

மிஸ்ஸான ஸ்கெட்ச்:

சம்பவத்தன்று, கணவர் மற்றும் குழந்தைகள் வீட்டில் இல்லாத நேரத்தை பயன்படுத்தி, கவிதா சிறுவனை வீட்டிற்கு வரவழைத்துள்ளார். கத்தி மற்றும் மிளகாய்த் தூள் உடன் வந்த அந்த சிறுவன், மாமியார் நிர்மலாவின் கண்களில் மிளகாய்ப் பொடியை தூவி, கழுத்தில் கத்தியால் குத்த முயன்றதாக கூறப்படுகிறது. ஆனால், நிர்மலா எதிர்த்து போராடி கூச்சலிட்டதால் அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்தனர். இதையடுத்து, சிக்கி விடுவோம் என அஞ்சிய சிறுவன் அங்கிருந்து தப்பிச் சென்றான்.

காயமடைந்த மாமியார் நிர்மலாவை போலீசார் மீட்டு சித்தூர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக கொலை முயற்சி பிரிவில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. சம்பவத்துக்குப் பிறகு கவிதா தலைமறைவாகி விட்டதாகவும், அவரை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்டு சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைக்கப்பட்டுள்ளார். 

இதையும் படிங்க: திருநங்கை நடுரோட்டில் குத்தி கொலை... முன்பகையால் வாலிபர் வெறி செயல்.!! 5 பேர் கைது.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Andhra Pradesh #ஆந்திரப் பிரதேசம் #illegal affair #கள்ளக்காதல் #Crime news
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story