×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

"தனிமையில் உல்லாசம்..." மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய வக்கீல்.!! 4 பேர் கைது.!!

தனிமையில் உல்லாசம்... மனைவியின் கள்ளக்காதலனை போட்டு தள்ளிய வக்கீல்.!! 4 பேர் கைது.!!

Advertisement

ஆந்திரா மாநிலம் தனுக்கு பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் சத்தியநாராயணா தனது மனைவி ஶ்ரீசாவுடன்  வசித்துள்ளார். இவர் அலுவலகப் பணியில் மும்முரம் காட்டியதால் தனிமையில் வசித்து வந்த ஸ்ரீசா அதே பகுதியை சேர்ந்த தன்னுடைய முன்னாள் கல்லூரி நண்பன் சுரேஷுடன் நட்பு பாராட்டி வந்துள்ளார்.

இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறி திருமணத்திற்கு புறம்பான உறவாகியது. இதனால் அடிக்கடி வீட்டில் தனிமையில் சந்திப்பது உல்லாசமாக இருப்பது என ஸ்ரீசா வாழ்ந்து வந்துள்ளார். இந்த விவகாரம் அக்கம் பக்கத்தினர் மூலமாக சத்ய நாராயணாவுக்கு தெரியவந்தது. இதனால் ஆத்திரமடைந்த கணவர், மனைவியை கண்டித்துள்ளார். ஆனால் கள்ளக்காதல் மோகம் முற்றிய மனைவியோ அதை காதில் போட்டுக் கொள்ளாமல் சுரேஷுடன் உல்லாசமாக இருந்துள்ளார்.

எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டியா.? என்று கூறி மனைவியை சரமாரியாக அடித்தார். மேலும் நான் சொல்வதை கேட்கவில்லை என்றால் கொலை செய்து விடுவேன் என மிரட்டியுள்ளார். இதற்கு காரணமான சுரேஷை வீட்டிற்கு வரவழைத்து மறைந்து காத்திருந்த சத்தியநாராயணா தனது 4 நண்பர்களுடன் சேர்ந்து அவரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்னர் சுரேஷின் உடலை சாக்கு மூட்டையில் கட்டி அருகில் உள்ள கோதாவரி ஆற்றில் வீசியுள்ளார்.

இதையும் படிங்க: கணவனை பிரிந்து வாழ்ந்து வந்த மனைவி! 4 வயது குழந்தை திடீரென மயங்கி விழுந்து! பிரேத பரிசோதனையில் தெரிந்த அதிர்ச்சி ! பதறவைக்கும் சம்பவம்...

வெளியே சென்ற சுரேஷ் வீட்டிற்கு வராததால் பதற்றமடைந்த குடும்பத்தினர் காவல் துறைக்கு புகாரளித்தனர். இந்நிலையில் கோதாவரி ஆற்றில் ஒரு சடலம் சாக்கு முட்டையில் கிடப்பதை அறிந்த போலீசார், அதை கையகப்படுத்தி அழுகிய நிலையிலிருந்த உடலை பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தி சுரேஷின் உடல் தான் என்பதை கண்டுபிடித்தனர். இதற்கடுத்து கொலை வழக்காக பதிவு செய்த போலீசார் சுரேஷின் செல்போன் சிக்னல் கடைசியாக ஸ்ரீசா வீட்டில் இருப்பதை கண்டறிந்து விசாரணை மேற்கொண்டதில் கொலை சம்பவத்திற்கான காரணம் தெரிய வந்துள்ளது.

இதற்கடுத்து குற்றவாளிகளான சத்ய நாராயணா மற்றும் அவரது 4 நண்பர்களும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: அட கொடுமையே... பணத்திற்காக சிறுமி கொலை.!! 15 வயது சிறுவன் வெறி செயல்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#India #Andhra Pradesh #Crime #Murder #EMA Killings
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story