ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணிக்கு நடந்த அதிர்ச்சி! 50 மீட்டர் தூரம் தரதரவென இழுத்து செல்லப்பட்ட பயங்கரம்.... பகீர் வீடியோ!!!
ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்து சுமார் 50 மீட்டர் இழுத்துச் செல்லப்பட்டார்.
உத்தரப் பிரதேச மாநிலம் ஆக்ரா கேன்ட் ரயில் நிலையத்தில் ரயிலில் ஏற முயன்ற பயணி தவறி விழுந்து உயிருக்கு ஆபத்தான நிலைக்குச் சென்றார். புறப்பட்டுக் கொண்டிருந்த சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் அவசரமாக ஏற முயன்றபோது இந்த அதிர்ச்சி சம்பவம் நடந்தது. அதிர்ஷ்டவசமாக, ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டதால் அவர் உயிர் தப்பினார்.
ஓடும் ரயிலில் ஏற முயன்ற பயணி
பிளாட்பார்மில் இருந்து ரயில் புறப்பட்டுக் கொண்டிருந்த நேரத்தில் பயணி ஒருவர் அவசரமாக ஓடிச் சென்று ரயிலில் ஏற முயன்றுள்ளார். அப்போது எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கியது. இதனால் நிலைதடுமாறிய அவர் ரயிலுக்கும் பிளாட்பார்மிற்கும் இடையே விழுந்தார்.
சுமார் 50 மீட்டர் இழுத்துச் சென்ற ரயில்
ரயில் தொடர்ந்து நகர்ந்ததால், அந்தப் பயணி தண்டவாளத்தின் ஓரமாக சுமார் 50 மீட்டர் தூரம் வரை இழுத்துச் செல்லப்பட்டதாக கூறப்படுகிறது. இதைப் பார்த்த பிளாட்பார்மில் இருந்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ரயிலை நிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டது.
ரயில் நிறுத்தப்பட்டதைத் தொடர்ந்து பயணி மீட்கப்பட்டார். உடனடி நடவடிக்கை காரணமாக அவர் உயிர் தப்பினார். ஓடும் ரயிலில் ஏற முயற்சிப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை இந்த காட்சி மீண்டும் உணர்த்தியுள்ளது.
சபர்மதி எக்ஸ்பிரஸில் அடுத்தடுத்து பரபரப்பு
சபர்மதி எக்ஸ்பிரஸ் ரயிலில் கடந்த மாதம் பெண் ஒருவர் குழந்தை பெற்றெடுத்த சம்பவமும், பீகாரைச் சேர்ந்த சிறுவர்கள் கடத்தல் முயற்சி முறியடிக்கப்பட்ட சம்பவமும் பேசுபொருளாகின. இந்நிலையில், ஆக்ரா கேன்ட் நிலையத்தில் பயணி ஒருவர் ஆபத்தில் சிக்கிய Sabarmati Express சம்பவம் ரயில்வே வட்டாரத்தில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: ஒரு ரீல்ஸ் வீடியோவுக்காகவா இப்படி? சொந்த மகளையே கொடூரமாக தாக்கி நாடகமாடிய தந்தை! இறுதியில் அம்பலமான அதிர்ச்சி உண்மை...!!!