விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் விபரீதம்.. நீரில் மூழ்கி 9 பேர் பலி.. ஒடிசாவில் சோகம்!
விநாயகர் சிலையை கரைக்க சென்ற இடத்தில் விபரீதம்.. நீரில் மூழ்கி 9 பேர் பலி; ஒடிசாவில் சோகம்!
ஒடிசாவில் விநாயகர் சதுர்த்தி விழா உற்சாகமாகக் கொண்டாடப்பட்ட நிலையில், சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்ச்சியின்போது அடுத்தடுத்து சோக சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் கடந்த 24 மணி நேரத்தில் நீரில் மூழ்கிய சம்பவங்களில் 9 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கஞ்சம், சுந்தர்கார், பத்ரக், கோரபுட், காலஹண்டி உள்ளிட்ட மாவட்டங்களில் இந்த உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளன. விநாயகர் சிலைகளை ஆறு, குளம் உள்ளிட்ட நீர்நிலைகளில் கரைக்கச் சென்றபோது எதிர்பாராத விதமாக நீரில் மூழ்கியதில் பலர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
ஜெகத்சிங்பூர் மாவட்டம் எர்சாமா நகரில் உள்ள கோபால்பூர் பகுதியில் ஒடானலா ஆற்றில் சிலை கரைக்கும் நிகழ்ச்சியின்போது சிலர் நீரில் மூழ்கியதாக ஒடிசா தீயணைப்பு மற்றும் அவசரகால சேவைத் துறை தெரிவித்துள்ளது. அங்கு மேற்கொள்ளப்பட்ட தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் 4 உடல்கள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தந்தை–மகன் இடையே குடும்பத் தகராறு.. தந்தையால் மகனுக்கு நேர்ந்த கொடூரம்.. ஒடிசாவில் அதிர்ச்சி!
மேலும், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் நீரில் மூழ்கியவர்களில் 7 பேர் மீட்கப்பட்டுள்ளனர். சிலர் காணாமல் போனதாகவும் தகவல் வெளியாகியுள்ள நிலையில், அவர்களைத் தேடும் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த தொடர் சோக சம்பவங்களுக்கு ஒடிசா முதல்வர் மோகன் சரண் மஜ்ஜி, எதிர்க்கட்சித் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக், ஒடிசா காங்கிரஸ் தலைவர் பக்த சரண் தாஸ் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: கன்ஃபார்ம் டிக்கெட் என ஆசை வார்த்தை.. ரயில் நிலையத்திலேயே இளம்பெண்ணுக்கு கொடூரம்!