"சிக்கன் சாப்பிட கேட்டது குற்றமா... " 7 வயது மகன் அடித்து கொலை.!! தாய் வெறி செயல்.!!
சிக்கன் சாப்பிட கேட்டது குற்றமா... 7 வயது மகன் அடித்து கொலை.!! தாய் வெறி செயல்.!!
மகாராஷ்டிரா மாநிலத்தில் சிக்கன் சமைத்து கேட்ட 7 வயது சிறுவன் கொடூரமாக கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக அந்த சிறுவனின் தாயை கைது செய்துள்ள காவல் துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் பால்சார் மாவட்டத்திலுள்ள தனசர் கிராமத்தில் வசித்து வருபவர் பல்லவி கும்தே. 40 வயதான இவருக்கு 10 வயதில் மகளும், 7 வயதில் சின்மய் கும்தே என்ற மகனும் இருந்தனர். கணவரைப் பிரிந்த இவர் தனது குழந்தைகள் மற்றும் 2 சகோதரிகளுடன் வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமையன்று இவரது மகன் சின்மய் தனக்கு சிக்கன் சமைத்து தருமாறு தாயிடம் கேட்டிருக்கிறான்.
சிறுவன் தொடர்ந்து கோழி சமைத்து தர தாயிடம் கேட்டதால் ஆத்திரமடைந்த பல்லவி, தனது மகனையும், மகளையும் பூரிக்கட்டையால் சராமாரியாக தாக்கியிருக்கிறார். இந்த தாக்குதலில் படுகாயமடைந்த குழந்தைகளை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லாமல் அஜாக்கிரதையாக இருந்துள்ளார். இதில் பல்லவியின் மகன் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இதனைத் தொடர்ந்து குழந்தைகளின் அலறல் சத்தம் கேட்டதால் பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண் பல்லவியின் வீட்டிற்கு வந்து பார்த்திருக்கிறார். அப்போது மகனின் உடலை துணியால் மூடி வைத்திருக்கிறார் பல்லவி. இதுகுறித்து கேட்டபோது மஞ்சள் காமாலை நோயினால் தனது மகன் இறந்ததாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!
ஆனால் குழந்தையின் உடலில் ரத்த காயங்கள் இருந்ததால் சந்தேகமடைந்த பெண் இதுகுறித்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த காவல்துறையினர் குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர். மேலும் இது தொடர்பாக பல்லவியிடம் விசாரித்த போது தனது மகனை பூரிக்கட்டையால் அடித்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். இதனைத் தொடர்ந்து அவரை கைது செய்த காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து சிறையிலடைத்தனர். மேலும் இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த அவரது 10 வயது மகளை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
இதையும் படிங்க: அதிக போதை கேட்டு அடம் பிடித்த காதலி... அரிவாளால் வெட்டி சாய்த்த கள்ளக்காதலன்.!!