கேரளாவில் மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு... பெற்றோருக்கு அதிர்ச்சி!
கேரளாவில் மிக்சர் சாப்பிட்ட 3 வயது குழந்தை உயிரிழப்பு... பெற்றோருக்கு அதிர்ச்சி!
கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் குன்னம்புறம் பகுதியில் 3 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. மிக்சர் சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அதிலிருந்த நிலக்கடலை குழந்தையின் தொண்டையில் சிக்கியதால் திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டதை கவனித்த பெற்றோர் உடனடியாக அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தபோதிலும், சிகிச்சை பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இந்த சம்பவம் குழந்தையின் பெற்றோர், உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நிலக்கடலை, மிக்சர், முழு திராட்சை, கடின மிட்டாய் போன்றவை தொண்டையில் சிக்கி மூச்சுத்திணறலை ஏற்படுத்தும் அபாயம் அதிகம் இருப்பதாக மருத்துவர்கள் தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.
இதையும் படிங்க: இப்படியா நடக்கணும்! ஒன்றரை வயது குழந்தை சாப்பிட்ட நிலக்கடலை! சிறிது நேரத்தில் தாய்ப்பால் கொடுத்த அம்மா! அடுத்த நொடி நடந்த அதிர்ச்சி!
எனவே, குழந்தைகளுக்கு இதுபோன்ற உணவுகளை கொடுக்கும்போது பெற்றோர் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும். குழந்தை சாப்பிடும் நேரத்தில் அருகில் இருந்து கண்காணிப்பதும், வயதுக்கு ஏற்ற உணவுகளை மட்டுமே வழங்குவதும் இத்தகைய துயர சம்பவங்களைத் தவிர்க்க உதவும்.
இதையும் படிங்க: விளையாடும்போது நொடியில் நடந்த விபரீதம்! ஒரே ஒரு சின்ன கிராம்பால் 6 மாத ஆண் குழந்தை பரிதாபமாக உயிரிழப்பு! நெஞ்சை உலுக்கும் சம்பவம்.!!!