×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

பெண்களே ஜாக்கிரதை! ஆண்களை விட அதிகம் தாக்கும் நோய்.. அறிகுறிகள் இதோ.!

Health Tips: ஆண்களை விட பெண்களுக்கு ஈறு நோய் அதிகம் ஏற்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

பெண்களுக்கு அதிகம் ஏற்பட வாய்ப்புள்ள ஈறுநோய் பாதிப்பு குறித்து விரிவாக தெரிந்துகொள்ளலாம்.

எந்த சமயத்தில் அதிகம் பிரச்சனை?

Gum Disease in Women: ஒருவரின் ஆரோக்கியமான ஈறு பற்களை சுற்றிலும் மென்மையான வளைவு, சுருள் போன்ற தோற்றத்துடன் இருக்கும். பற்களின் இடைவெளியில் சரியாக பொருந்தியிருக்கும். இதில், ஆண்களைக்காட்டிலும் பெண்கள் ஈறு சார்ந்த நோயால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். பருவமடைதல், மாதவிடாய் நிற்கும் காலம், கர்ப்பகால நேரங்களில் இவ்வாறான பாதிப்புகள் அதிகம் இருக்கும்.

இதையும் படிங்க: Green Banana: பச்சை வாழைப்பழம் கேட்டு வாங்கி சாப்பிடுங்க.. என்னென்ன நன்மைகள்? தெரிஞ்சிக்கோங்க..!

அதிக வாய்ப்பு:

பெண்களுக்கு பொதுவாக 30 வயதில் இருந்து 54 வயது வரை பற்புறத்திசு நோயால் பாதிக்கப்பட அதிகம் வாய்ப்புகள் உண்டு. இந்த பிரச்சனைக்கு ஆரம்பகட்ட அறிகுறிகள் ஏதும் தெரியாது என்பதால், அதனை முன்பே கண்டறிவதும் கடினம். பெண்கள் பருவமடையும்போது புரோஜெஸ்டிரான், ஈஸ்டிரோஜன் ஹார்மோன் அளவு அதிகரித்து ஈறுகளில் ரத்த ஓட்டத்தை அதிகரிக்கும்.

மருத்துவரை அணுகவும்:

இந்த நேரத்தில் ஈறுகள் மென்மையாக, வீங்கி காணப்படும். சாதாரண நேரங்களில் கடினமான உணவுகளை உண்ணும்போது ஈறுகளில் ரத்தம் வடியும். இதனால் பருவமடையும் வயதில் இருக்கும் பெண்களின் வாய் ஆரோக்கியத்தில் அதிக கவனம் வேண்டும். காலை, இரவு பல்துலக்க வேண்டும். ஈறுகள், பற்களில் மாற்றம் தெரிந்தால் மருத்துவரை அணுகுவது நல்லது.

ஈறுகள் பாதிக்கப்படும்:

மாதவிலக்கு காலங்களில் ஈறு சிவந்து, வீங்கி ரத்தம் வடியும். அப்போது, வாயில் எரிச்சல், கன்னத்தின் உட்புறத்தில் புண்கள் ஏற்படும். மாதவிலக்கு ஏற்படும் முன் அறிகுறிகள் தோன்றி, மாதவிலக்கு தொடங்கியதும் மறையும். கருத்தடை மாத்திரை சாப்பிடுவோர், நீரிழிவு நோய் உள்ளவர்களுக்கும் ஈறுகள் எளிதில் பாதிக்கப்படும்.

முன்னெச்சரிக்கை:

மிதமான சூடுள்ள உப்பு கலந்த தண்ணீரை பயன்படுத்தி வாய் கொப்பளிக்கலாம். அதிக குளிர்ச்சி, சூடு கொண்ட உணவை தவிர்க்க வேண்டும். பற்களை துலக்க மென்மையான பிரஷை பயன்படுத்தலாம். ஈறுகள் பாதிப்பை தொடக்கத்திலேயே கண்காணித்தல் பிரச்சனையின் தீவிரத்தை குறைக்கலாம்.
 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Gum Disease Women #பற்கள் #ஈறு பிரச்சனை பெண்கள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story