×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

வாயு தொல்லை முதல் உடல் சூடு வரை.. குணமாக சூப்பர் டிப்ஸ்.!

வெந்தயம், கமலா ஆரஞ்சு போன்ற இயற்கை பொருட்கள் மூலம் தினசரி சுகாதாரத்தை பாதுகாக்கலாம்.

Advertisement

இயற்கை பொருட்களை பயன்படுத்தி வாயு தொல்லை, வயிற்று வலி, மூக்கடைப்பு, சரும நோய் மற்றும் உடல் சூடு போன்ற பிரச்சனைகளை குறைக்கலாம். 

வேப்பம் பூ:

நம் பாரம்பரிய மருத்துவ மரபில் உள்ள இயற்கை வைத்தியங்கள், சிறிய நோய்கள் மற்றும் உடல் குறைபாடுகளை தீர்க்க மிகவும் பயனுள்ளதாக உள்ளன. வாயு தொல்லை போன்ற பிரச்சனைகளுக்கு, வேப்பம் பூவை உலர்த்தி தூளாக்கி வெந்நீரில் கலந்து உட்கொள்ளுதல் நல்ல தீர்வாக கருதப்படுகிறது. இதனால் வாயு தொல்லை நீங்கி, ஆறாத வயிற்றுப்புண் குறையும்.

இதையும் படிங்க: தினமும் வெறும் வயிற்றில் ஊறவைத்த பேரிச்சம்பழம் ஒன்று சாப்பிடுவதால் கொட்டிக்கிடக்கும் எக்கச்சக்க நன்மைகள்!

வெந்தயம்:

வயிற்று வலி குறைக்க, வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் கலந்து குடிக்கலாம். இதன் மூலம் வயிற்றில் ஏற்படும் சூடு & வலி குறைந்து உடல் அமைதியாகும். மேலும், வயிற்றுக் கடுப்பு பிரச்சனைக்கு புழுங்கல் அரிசி வடித்த தண்ணீரில் சிறிது உப்பும் வெண்ணெயும் கலந்து குடிக்கலாம்.

சுக்கு:

சரும நோய் குணப்படுத்த, கமலா ஆரஞ்சு தோலை வெயிலில் உலர்த்து பொடி செய்து தினசரி சோப்புக்குப் பதிலாக உடம்பில் தேய்த்து குளிப்பது நல்லது. இதேபோல், மூக்கடைப்பு குறைக்க, சுக்கை தோலை நீக்கி அரை லிட்டர் நீரில் சுண்டக் காய்ச்சிய பால் மற்றும் சர்க்கரையுடன் காலை, மாலை சாப்பிடலாம். இதனால் மூக்கடைப்பு விரைவில் நீங்கி, சுவாசம் சீராக இருக்கும்.

வெந்தயம்:

கண் எரிச்சல் மற்றும் உடல் சூடு குறைக்க, வெந்தயத்தை ஊற வைத்து நன்கு அரைத்து, தலைமுடி வேர்களுக்கு தடவி விட்டு ஊறவிடுவது நல்லது. தலைமுடி வளர்ச்சிக்கும் உதவியாக இருக்கும். இயற்கை பொருட்களை முறையாக பயன்படுத்துவதன் மூலம், சிறிய நோய்கள், உடல் சூடு மற்றும் சரும பிரச்சனைகள் குணமாகும்.

குறிப்பு: மேற்படி கொடுக்கப்பட்டுள்ள தகவல்கள் பொதுவானவை. உங்களுக்கு தனிப்பட்ட முறையில் ஏதேனும் உடல்நலக்குறைவு இருந்தால் மருத்துவரை நாடவும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #stomach pain #Skin Diseases #ஆரோக்கியம் #ஹெல்த் டிப்ஸ்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story