போட்டுத்தாக்கும் வெயில்.. பொதுமக்களுக்கு முக்கிய எச்சரிக்கை.. முழு விபரம் இதோ.!
Summer Season India: இந்தியாவில் கோடைகாலம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதுகுறித்த வழிகாட்டுதல் வெளியிடப்பட்டுள்ளது.
கோடையில் செய்யவேண்டியது மற்றும் கூடாதது தொடர்பான அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.
வயது வித்தியாசமின்றி பாதிப்பு:
Summer Heatwave: சுட்டெரிக்கும் வெயிலின் தாக்கம் இந்தியாவில் கடுமையாக அதிகரித்து இருக்கிறது. இதனால் முதியவர்கள், இளைஞர்கள், குழந்தைகள் என பலரும் உடல்நலக்குறைபாடுகளை எதிர்கொண்டு வருகின்றனர். இந்த விஷயத்தை நாம் கவனமாக கையாள வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி இருக்கின்றனர்.
இதையும் படிங்க: குளிர்காலத்தில் அதிகரிக்கும் வாய்ப்புண் பிரச்சனை.. இந்த விஷயங்களை நோட் பண்ணுங்க.!
வியர்வை நல்லதிலும் கெட்டது:
வெப்பம் அதிகரிக்கும்போது நமது உடலில் நீர்சத்து குறையும். இதனால் உடல் சோர்வு, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வெப்பத்தாக்கு எனப்படும் ஹீட்ஸ்ட்ரோக் அதிகளவில் ஏற்பட்டு வருகின்றன. இவ்வாறான அசௌகரியத்தை தவிர்க்க உடலில் நீர்சத்து அவசியமான ஒன்றாகும். உடலில் அதிக வியர்வை வெளியேறி உடலின் செயல்பாடுகள் சீர்குலைந்தால் நீர்சத்து குறைபாடு ஏற்படும். வியர்வையின் வழியே உடலுக்கு தேவையான அத்தியாவசிய உப்பும் வெளியேறும். இதனால் உடலின் செயல்பாடுகள் கேள்விக்குறியாகும்.
உடல்நல பாதிப்புகள்:
பலரும் இதனை தொடக்கத்தில் சோர்வு என நினைத்துக்கொள்வது தவறானது ஆகும். தாகம் எதுக்கும் முன்பே தண்ணீர் குடிப்பது நல்லது. தலைவலி, மயக்கம் போன்றவை இருந்தால் மருத்துவரை நாட வேண்டும். கிராமங்கள், நகரங்களிலும் வெப்பத்தின் தாக்கம் அதிகரிப்பதால் மக்கள் கவனமாக இருக்க வேண்டும். கான்கிரீட் கட்டிடங்களை தவிர்த்து மர நிழலில் பகலில் இருப்பது நல்லது. அதிக வெப்பம் உடலை மட்டுமல்லாது மனதையும் பாதிக்கும். அதிக வெப்பத்தால் தூக்கமின்மை, மனஅழுத்தம், சுவாச பிரச்சனை ஏற்படும்.
கவனம் தேவை:
வெயிலின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க நண்பகல் நேரத்தில் அவசியமின்றி வெளியே செல்ல கூடாது. வெளிர்நிற பருத்தி உடைகள் நல்லது. 1 மணிநேரத்துக்கு ஒருமுறை குறைந்தது 300 - 300 மில்லி தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், இயற்கையான பழச்சாறுகள் குடிக்கலாம். வெயிலில் செல்லும்போது அசௌகரியம் இருந்தால், உடலில் மந்தத்தன்மை ஏற்பட்டால் உடனடியாக மர நிழலில் இளைப்பாற வேண்டும்.
இதையும் படிங்க: மக்களே உஷார்! Heat stroke யார் யாருக்கு வரும் தெரியுமா? இதிலிருந்து தப்பிக்க இதுதான் வழி!!!