நிற்காமல் போகும் வயிற்றுப்போக்கை எப்படி உடனே நிறுத்துவது?
How to stop diarrhea

வயிற்றுப்போக்கு வந்தாலே சிலர் உடனே மருத்துவமனைக்கு செல்வது வழக்கம். ஆனால் வயிற்றுப் போக்கை உடனே நிறுத்துவதற்கு அதிகப்படியான மருந்துகள் வீட்டிலேயே உள்ளன. இதனைப் பயன்படுத்தி ஓரிரு நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்க விட்டால் மருத்துவரை தேடிச் செல்லலாம்.
மாதுளை பழம்:
மாதுளை பழத்தில் அதிகப்படியான மருத்துவ குணங்கள் அடங்கியுள்ளது. மாதுளம் பழத்தில் அதிகப்படியான நார்ச்சத்து அடங்கியுள்ளது. மாதுளை பழம் மட்டுமின்றி மாதுளை பழத்தின் ஓடு பலவற்றிற்கு மருந்தாக பயன்படுகிறது. மாதுளை பழத்தின் தோலை நன்கு காய வைத்து பொடி செய்து ஒரு டீஸ்பூன் அளவு எடுத்து தேனுடன் கலந்து குழப்பி சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு உடனே நின்று விடும்.
கொய்யா:
கொய்யாப் பழத்தை தினந்தோறும் சாப்பிட்டு வந்தால் வயிற்றுப் பிரச்சனைகள் நீங்கும். கொய்யாப்பழம் சர்க்கரை நோய் உள்ளவர்களுக்கும் நல்ல மருந்தாகும். வயிற்றுப்போக்கு உள்ளவர்கள் கொய்யா மரத்தில் உள்ள கொழுந்து போன்ற இலைகளை பறித்து நன்கு மென்று அந்த சாரை விழுங்கினால் உடனடியாக வயிற்றுப்போக்கு நின்று விடும். அதேபோல் கொய்யா பிஞ்சினை கடித்து நன்கு மென்று விழுங்கினால் வயிற்றுப்போக்கு நின்று விடும்.
எலுமிச்சை:
எலுமிச்சை பழத்தினை பிழிந்து சுடுநீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும். அதேபோல் தேனையும் வெந்நீரில் கலந்து குடித்தால் வயிற்றுப்போக்கு குணமாகும்.
வயிற்றுப் போக்கு இருக்கும் போது காரமான உணவுகளை எடுப்பதைத் தவிர்க்க வேண்டும். அதேபோல் வயிற்றுப்போக்கு இருக்கும்போது மது அருந்தினால் உயிரைப் பறிக்கும் ஆபத்து ஏற்படும்.
வயிற்றுப்போக்கு ஏற்பட்டால் நிற்கும் வரை அசைவ உணவுகளை தவிர்ப்பது மிகவும் நல்லது. வயிற்றுப் போக்கிற்காக வைத்தியம் எடுக்கும் சமயத்தில் தயிர் அதிகம் எடுத்துக்கொள்வது நல்லது.