தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அச்சச்சோ.. பெண்களை பாதிக்கும் சிறுநீர்ப்பாதை தொற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?..!

அச்சச்சோ.. பெண்களை பாதிக்கும் சிறுநீர்ப்பாதை தொற்றில் இருந்து தப்பிப்பது எப்படி?..!

How to Avoid and Identify Urinary tract infections Woman Tamil Tips Advertisement

சிறுநீர்ப்பாதை தொற்று என்பது பச்சிளம் குழந்தை முதல் மனிதன் உயிர்வாழும் உச்ச வயது வரை அனைவரும் ஏற்படும் பொதுவான நோயாகும். ஆனால்,  சிறுநீர்ப்பாதை தொற்றுநோய் பிரச்சனைகள் பெண்களே அதிகளவு பாதிக்கப்டுகிறார்கள். இதனால் அதிக எரிச்சல் ஏற்படுவது மட்டுமல்லாது, பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதனை தொடக்கத்தில் கண்டறிவிட்டதால் பாதிப்பில் இருந்து எளிதில் தப்பிவிடலாம். 

பெண்களின் பெண்ணுறுப்பு அமைப்பு சிறுநீர்ப்பாதை தொற்றுக்கு முக்கிய காரணமாக அமைகிறது. பெண்களின் சிறுநீர் வெளியேற்றும் வழி சிறியதாக இருப்பதால், நுண்ணியிரிகள் சிறுநீர் பாதைக்குள் எளிமையாக சென்று பெண்ணை சிறுநீர்ப்பாதை தொற்றை சந்திக்க வைக்கிறது. ஈ கோலை என்ற பாக்டீரியா சிறுநீர்த்தொற்று பிரச்சனையை ஏற்படுத்துகிறது. 

Urinary tract infections

திருமணம் முடிந்து இல்லறத்தில் ஈடுபடும் பெண்கள், கர்ப்பிணி பெண்களுக்கு சிறுநீர்ப்பாதை தொற்று அதிகளவு ஏற்படலாம். இவற்றில் புதிதாக திருமணம் முடிந்துள்ள பெண்களுக்கு ஏற்படும் சிறுநீர்ப்பாதை தொற்று ஹனி சிஸ்டைட்டிஸ் என்று கூறுவார்கள். நீரிழிவு நோய் பிரச்சனை உள்ள பெண்களுக்கு சிறுநீரக தொற்று ஏற்பட வாய்ப்புகள் அதிகளவு உள்ளன. இதனைப்போல, சுகாதாரமில்லாத பொது கழிப்படத்தை உபயோகம் செய்வதாலும் சிறுநீர்ப்பாதை தொற்று ஏற்படலாம். 

நமது உடலை சுத்தமாக வைத்துள்ளது போல, கழிப்பிடத்தையும் சுத்தமாக வைக்க வேண்டும். சுகாதாரம் இல்லாமல் உடல்நலத்தை கவனிக்காமல் இருப்பது, சுகாதாரம் இல்லாத கழிப்பறையை உபயோகம் செய்வதை இயன்றளவு தவிர்த்திட வேண்டும். இதனைத்தவிர்த்து, சிறுவயதில் இருந்தே ஏற்படும் சிறுநீர்ப்பிரச்சனை, சிறுநீரக அடைப்பு போன்ற பிரச்சனை இருந்தாலும் சிறுநீர்பாதை தொற்று ஏற்படும். மாதவிடாய் நின்றபின் ஈஸ்டிரோஜன் சுரப்பு குறைவதாலும் சிறுநீர் பாதையில் தொற்று ஏற்படலாம். 

சிறுநீர்ப்பாதை தொற்று அறிகுறிகள்: 

சிறுநீரை கழிக்கும் போது அதிகளவு எரிச்சல் ஏற்படுவது, அதிக சூட்டுடன் சிறுநீர் வெளியேறுவது, சிறுநீரை குறைந்தளவு அடிக்கடி கழிப்பது, அடி வயிற்று வலி, காய்ச்சல் மற்றும் குளிர், சிறுநீர் கழிக்கும் நேரங்களில் இரத்தம் வருவது போன்றவை சிறுநீர்ப்பாதை தொற்றின் அறிகுறி ஆகும். 

உறுதி செய்வது எப்படி?: 

சிறுநீர் பரிசோதனை மூலமாக சிறுநீர் தொற்று உள்ளதை உறுதி செய்யலாம். இதனை எளிதில் குணப்படுத்த மருத்துவரின் ஆலோசனைப்படி மாத்திரை எடுத்துக்கொண்டால் போதுமானது. 


 
சிறுநீர்ப்பாதை தொற்றை தவிர்க்க செய்யவேண்டியது: 

நாளொன்றுக்கு 3 லி - 4 லிட்டர் தண்ணீரை குடிப்பது, சிறுநீர் பாதையை சுத்தமாக வைப்பது, பொது கழிப்பிடத்தை உபயோகம் செய்ய அவசியம் ஏற்பட்டால் சுகாதாரத்தை உறுதி செய்வது அல்லது வீட்டிற்கு வந்து இளம் சூடான நீரில் அந்தரங்க பகுதிகளை சுத்தம் செய்வது, நீண்ட நேரம் சிறுநீரை அடக்கி வைக்காமல் இருப்பது போன்றவற்றை மேற்கொண்டால் நல்லது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Urinary tract infections #Ladies Corner #health tips #Tamil Spark
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story