இந்தியாவுக்கு வரவிருக்கும் பேராபத்து? பரவும் நோய்.. 250 பேர் பலி.. குழந்தைகள் ஜாக்கிரதை..!
Deadly Measles Outbreak in Bangladesh: தட்டம்மை நோய் பாதிப்பு காரணமாக வங்கதேசத்தில் 250 பேர் பலியாகியுள்ளனர்.
கோடைகாலத்தில் பரவும் தட்டம்மை வங்கதேசத்தை வாட்டி வதைக்கிறது.
வங்கதேசத்தில் பரவல்:
Measles Children at High Risk: இந்தியா, இலங்கை, வங்கதேசம், பாகிஸ்தான் உள்ளிட்ட தெற்காசிய நாடுகளில் கோடைகாலம் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. இதனால் கடுமையான வெயில் சுட்டெரித்து வரும் நிலையில், மக்கள் பரிதவிப்புக்கு உள்ளாகி வருகின்றனர். தற்போது வங்கதேசம் நாட்டில் கடுமையான வெயில் காரணமாக தட்டம்மை நோய் பரவி வருகிறது. இந்த நோயினால் தற்போது வரை அங்கு சுமார் 250 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து இருப்பதாகவும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க: 'மழைநீரில் வெறும் காலில் நடக்காதீங்க'.. வைரஸ் அபாயம்.. தமிழக சுகாதாரத்துறை கடும் எச்சரிக்கை.!
உலக சுகாதார அமைப்பு வருத்தம்:
சுமார் ஒன்று முதல் 14 வயதுடைய குழந்தைகள் ஏராளமானோர் பாதிக்கப்படுவதாகவும், தடுப்பூசியின் விகிதம் குறைந்துள்ளதாகவும் உலக சுகாதார அமைப்பும் வங்கதேசத்தில் பரவும் தட்டம்மை நோய் குறித்து வருத்தம் தெரிவித்துள்ளது. இந்த நோயானது பரவும் வாய்ப்பை கொண்டது என்பதால், வங்கதேசத்தின் அண்டை நாடான இந்தியாவின் எல்லை பகுதிகளிலும் கண்காணிப்பு வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
தட்டம்மை:
சுவாச தொற்றுநோயாக கருதப்படும் தட்டம்மை காற்றின் மூலம் எளிதில் பரவும். ஆனால், அதற்கு தடுப்பூசி உண்டு என்பதால் சரியான வயதில் அதனை செலுத்திக்கொள்வது அவசியம். இந்த நோயின் ஆரம்பட்ட அறிகுறிகளாக 104 டிகிரி பேரன்ஹீட் காய்ச்சல், இருமல், மூக்கு ஒழுகுதல், சிவந்த கண்கள், தொண்டையில் புண், சொறி, வாய்ந்த உட்புறம், கன்னம் பகுதிகளில் சிறிய வெள்ளை புள்ளிக இருக்கும். ஒருவர் இருமும்போதும், தும்மும்போதும், சுவாசிக்கும்போது காற்றில் இது பரவும். கடுமையான நிமோனியா, மூளை வீக்கம், காது தொற்று, வயிற்றுப்போக்கு அபாயகட்ட அறிகுறிகள் ஆகும். கர்ப்பிணி பெண்கள் கவனமாக இருக்க வேண்டும்.
இதுசார்ந்த அறிகுறிகள் இருந்தால் கவனமாக இருக்க வேண்டும். சந்தேகம் இருப்பின் மருத்துவரின் உதவியை நாடலாம். கோடை காலத்தில் உடலுக்கு தேவையான நீரை குடிப்பது நல்லது. கடந்த வாரம் இலங்கையிலும் தட்டம்மை பரவல் உறுதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மக்களே உஷார்.. அதிகரிக்கும் மெட்ராஸ் ஐ கண் தொற்று.. மருத்துவர்கள் எச்சரிக்கை.!