தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உங்கள் கண்களுக்கு கீழ் கருவளையம் வந்து அசிங்கமா இருக்கா? அப்போ இத கண்டிப்பா ட்ரை பண்ணுங்க!

Health tips for remove block spot under eye in tamil

Health tips for remove block spot under eye in tamil Advertisement

வளர்ந்து வரும் நாகரிக உலகில் பெண்களுக்கு நிகராக ஆண்களும் தங்களது அழகில் கவனம் செலுத்த தொடங்கி விட்டனர். நாம் ஒருவரை பார்க்கும் பொது முதலில் உற்று நோக்குவது அவர்களின் கண்களைத்தான். அவ்வாறு கண்களை பார்க்கும் போது முதலில் தென்படுவது கண்களுக்கு கீழே உள்ள கருவாலயம்தான்.

ஏன் கருவளையங்கள் ஏற்படுகிறது? அவை வராமல் தடுப்பது எப்படி வாருங்கள் தெரிந்து கொள்ளலாம்.

இன்றைய காலத்தில் பிறந்த குழந்தைகள் கூட தொலைபேசி, கம்ப்யூட்டர் என அணைத்து சாதனங்களையும் உபயோக படுத்துகின்றனர். அவ்வாறு நாம் அதிக நேரம் அவற்றை உபயோகப்படுத்தும் போது நமது கண்கள் சோர்வாகி வறண்டு போகிறது. இதனால் கண்களை சுற்றி கருவளையம் ஏற்படுகிறது.

Health tips in tamil

இதை எவ்வாறு தடுப்பது?

தினமும் எட்டு மணி நேரம் தூங்குவது மிகவும் அவசியம். காம்ப்யூட்டர், மொபைல் என்று தொடர்ச்சியாகப் பார்த்துக் கண்களைச் சோர்வடைய வைக்க கூடாது. வெயிலில் செல்லும் போது சன் கிளாஸ் போடுவதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள்.

பஞ்சை குளிர்ந்த நீரில் நனைத்து அதை உங்கள் கண்களில் ஒத்தடம் கொடுங்கள். இவாறு செய்வதன் மூலம் உங்கள் கருவளையங்கள் காணாமல் போக வாய்ப்புள்ளது.

தூங்கும் போது, தலையைச் சற்று உலரவைத்து தூங்கினால், முகத்துக்கும் கண்களுக்கும் ரத்த ஓட்டம் பாய்ந்து கருவளையம் வராது.

கருவளையம் மறைய என்ன செய்ய வேண்டும்?

தக்காளி சாறு மற்றும் எலுமிச்சை சாறை சம அளவில் எடுத்துக்கொள்ளுங்கள். பின்பு இரண்டையும் நற்றாய் கலந்து கண்களுக்கு கீழே கருவளையம் உள்ள இடத்தில் தடவவும். பின்பு அதை 10 நிமிடங்கள் ஊரவைத்து பின்பு குளிர்ந்த நீரில் கழுவவும். அவரு செய்வதன் மூலம் கருவளையம் படிப்படியாக குறையும். 

உருளைக்கிழங்கக் கழுவி, தோலுடன் துருவி சாறெடுத்து, அந்தச் சாற்றில் பஞ்சை நனைத்து கண்களின் மேல் வைத்து சில நிமிடங்கள் கழத்தித்து எடுத்து வர, கருவளையம் நீங்கும். காய்ச்சாதா பாலை கண்களைச் சுற்றி தடவுவதும் நல்ல தீர்வாகும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health tips in tamil #Remove block spot under eye #How to remove karuvalayam in tamil
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story