×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அழகான கூந்தல் வேண்டுமா.? அப்படினா இந்த 5 உணவுக்கு "நோ" சொல்லுங்கள்.!

அழகான கூந்தல் வேண்டுமா.? அப்படினா இந்த 5 உணவுக்கு நோ சொல்லுங்கள்.!

Advertisement

முடியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் அனைவரிடத்திலும் அதிகமாக இருக்கும். ஆனால் நாம் உண்ணும் உணவே நம் முடிக்கு எதிரியாக மாறும் என்று சொன்னால் நம்புவீர்களா?

அதிகப்படியான சர்க்கரை கலந்த உணவுகள் ரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகப்படுத்தி முடியின் வேர்களை பலவீனப்படுத்தும். பாட்டில் ஜூஸ், இனிப்புகள் போன்றவை அதிகமாக சாப்பிடும் போது தலையில் உள்ள ரத்த நாளங்கள் வீக்கம் அடைந்து, முடிக்கு செல்லும் ஊட்டச்சத்து தடை படுகிறது. இது காலப்போக்கில் முடியின் அடர்த்தியை குறைத்து முடி கொட்டுவதற்கு காரணமாகிறது.

மேலும் மைதாவால் செய்யப்பட்ட பிரட், பாஸ்தா, மற்றும் பரோட்டா போன்ற உணவுகளில் நார்ச்சத்து மிக குறைவாகவே உள்ளதால், இவ்வகை உணவுகள் ஹார்மோன் மாற்றங்களை உண்டாக்கி கூந்தல் வளர்ச்சியை பாதிக்கிறது. இந்த உணவுகள் உடலின் ஆன்ட்டி ஆக்சிடன்ட்களை குறைப்பதால் முடி எளிதில் உடையக்கூடிய நிலைக்கு தள்ளப்படுகிறது.

இதையும் படிங்க: எக்கச்சக்க நன்மைகளை தரும் நெல்லிக்காய்! ஆனால் இவர்கள் மட்டும் இதை சாப்பிடக் கூடாது! யாரெல்லாம் தெரியுமா?

எண்ணெயில் பொறிக்கப்பட்ட சிப்ஸ், பர்கர் மற்றும் சமோசா போன்ற உணவுகளில் கெட்ட கொழுப்புகள் அதிகமாக இருப்பதால், இவை கூந்தலுக்கு தீங்கு விளைவிக்கின்றன. அதிகப்படியான எண்ணெய் பசை தலையில் உள்ள துவாரங்களை அடைத்து செபொர்ஹெயிக் டெர்மடிடிஸ் (Seborrheic dermatitis) போன்ற பாதிப்புகளை உண்டாக்கும். இதனால் தலையில் அரிப்பு ஏற்பட்டு முடியின் ஆரோக்கியம் சீர்குலைந்து நாளடைவில் முடி கொட்டத் தொடங்குகிறது.

மது மற்றும் காஃபின் கலந்த பானங்களை அதிகமாகக் குடிப்பதால் உடல் விரைவில் வறட்சியடைந்து ஈரப்பதத்தை இழக்கிறது. கூந்தல் ஆரோக்கியத்திற்குத் தேவையான நீர்ச்சத்து குறையும்போது முடி அதன் மென்மைத் தன்மையை இழந்து வறண்டு போகிறது.
போதிய ஈரப்பதம் இல்லாத காரணத்தால் முடி நுனிகளில் பிளவு ஏற்பட்டு மிக எளிதாகக் கொட்ட ஆரம்பிக்கிறது.

சில வகை மீன்களில் பாதரசம் (Mercury) அதிகளவில் காணப்படுவது கூந்தல் வளர்ச்சிக்குத் தடையாக அமைகிறது. பாதரசம் உடலில் சேரும்போது புரதச் சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுத்து முடியின் வேர்க்கால்களைச் சேதப்படுத்துகிறது. எனவே கடலில் பிடிபடும் பெரிய வகை மீன்களைக் குறைந்த அளவில் உட்கொள்வது உங்கள் கூந்தல் அரோக்கியத்திற்குப் பாதுகாப்பானது.

இதையும் படிங்க: ஜூஸ் வாங்கி குடிப்பதுதான் உங்களோட முழுநேர வேலையா? இதை முதலில் தெரிஞ்சிக்கோங்க.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#hair #foods #health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story