×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனை கட்டுக்குள் வைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?.!

சிறுவயதில் குழந்தைகளுக்கு ஏற்படும் உடல்பருமனை கட்டுக்குள் வைக்க பெற்றோர்கள் செய்ய வேண்டியது என்ன?.!

Advertisement

இன்றளவில் குழந்தை பருவத்தில் உடல் எடை பிரச்சனையை எதிர்கொள்வோரின் எண்ணிக்கை உலகளவில் வெகுவாக அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் எடுத்துக்கொள்ளாத பட்சத்தில் நீரிழிவு நோய், உயர் இரத்தஅழுத்த பிரச்சனை, அதிக கொழுப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். குழந்தைகளின் உடல் பருமனை குறைக்க ஆரோக்கிய உணவு, உடற்பயிற்சி போன்றவற்றை மேற்கொள்ள வேண்டும்.

இரவு நேரத்தில் தாமதமாக சாப்பிடுவது அனைத்து வயதினருக்கும் கேடானதாகும். குழந்தைகளுக்கு இது பெரிய பாதிப்பை ஏற்படுத்தும். பதின்ம வயதுள்ளவர்கள் செல்போனை அதிக நேரம் பயன்படுத்தி வரும் நிலையில், இரவில் தாமதமாக உறங்கி வருகின்றனர். இதனால் உடல் பருமன் ஏற்படும். இரவில் உறங்கும் போதுதான் வளர்சிதை மாற்றம் ஏற்படும். இரவில் 7.30 மணிக்கு சாப்பிட வேண்டும். 

குழந்தைகளுக்கு நீர்ச்சத்துள்ள உணவுகளை வழங்குதல் மூலமாக அவர்களின் உடலில் நீர்சத்து இருக்கும். பகல் வேளைகளில் குளிர்பானம் குடிப்பதை தவிர்த்து, இயற்கை பழச்சாறு போன்றவை வழங்கலாம். வானவில் உணவு என்ற முறையில், பலவண்ணம் கொண்ட பழங்கள் மற்றும் காய்கறிகளை உணவில் சேர்க்க வேண்டும். தினமும் பச்சைகாய்கறி சாப்பிடலாம். 

துரித உணவகத்தில் தயாரிக்கப்படும் உணவுகள், நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை குறைந்தளவு கொடுப்பது அல்லது கொடுக்காமல் இருப்பது நல்லது. நொறுக்குத்தீனிகள் வேண்டும் என்றால் அதனை முறுக்கு, தட்டை என வீட்டில் தயார் செய்து கொடுக்கலாம். குழந்தை பருவத்திலேயே அவர்களை இயற்கை சார்ந்த மற்றும் வீட்டில் தயாரிக்கப்படும் நொறுக்குத்தீனிகள் போன்றவற்றை கொடுத்து பழக்கப்படுத்திவிட்டால், வளரும் பருவத்தில் அது அவர்களின் ஆரோக்கியத்திற்கு உதவி செய்யும். 

குழந்தைகள் வீட்டிலேயே முடங்கி இருக்காமல், அவ்வப்போது வெளியே சென்று விளையாட அல்லது தாய்-தந்தையுடன் உடற்பயிற்சி செய்ய என அவர்களின் வாழ்க்கைமுறையை பயிற்றுவிக்க வேண்டும். சர்க்கரை, சுத்திகரிக்கப்பட்ட மாவு பொருட்களில் தயார் செய்யப்படும் உணவு பண்டங்களை தவிர்க்க வேண்டும்.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#parents #mother #children #Tips #health tips #Life style #weight loss
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story