×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

அடேங்கப்பா.. கருப்பு திராட்சையில் இத்தனை நன்மைகளா? தெரிஞ்சிக்கோங்க மக்களே அசந்துபோவீங்க.!

Black Grape Nanmaigal: கருப்பு திராட்சை நன்மைகள் தெரிந்துகொள்ளுங்கள்.

Advertisement

உடலுக்கு பல்வேறு ஆரோக்கிய நன்மைகளை வழங்கும் பழங்களில் கருப்பு திராட்சை முதன்மையானது ஆகும்.

ஒவ்வொரு நபர்களின் ஆரோக்கியத்துக்கு தேவையான ஆண்டி-ஆக்சிடன்ட், வைட்டமின்கள், நார்சத்து உட்பட பல்வேறு சத்துக்களை வாரிவழங்கும் கருப்பு திராட்சை, இதய ஆரோக்கியத்தை மேம்படுத்தும். செரிமானத்தை ஊக்குவிக்கும். தோல் & கூந்தல் ஆரோக்கியத்துக்கு நன்மையை செய்யும். 

இதயத்துக்கு நல்லது:

ஆக்சிஜனேற்றி நிறைந்துள்ள திராட்சையில் பொட்டாசியம் இருக்கிறது. இது கேடான கொழுப்புகளை குறைக்கவும், ரத்த அழுத்தத்தை சீராக பராமரிக்கவும் உதவும். இதனால் இதயம் சார்ந்த பிரச்சனைகள் தவிர்க்கப்படும். நார்சத்து, இயற்கையான மலமிளக்கும் பண்புகள் கொண்டுள்ளதால் செரிமானம் மேம்படும். மலச்சிக்கல் பிரச்சனைகள் சரியாகும்.

இதையும் படிங்க: அடேங்கப்பா.. சோயா பீன்ஸில் இவ்வுளவு நன்மைகளா? சாப்பிடுங்க., சத்துக்களை அள்ளுங்க மக்களே.!

ரத்தசோகை சரியாகும்:

இரும்புசத்து நிறைந்து காணப்படும் திராட்சை ஹீமோகுளோபின் அளவை உயர்த்த உதவும். உலர் திராட்சையை தினமும் நீரில் ஊறவைத்து சாப்பிடலாம். வைட்டமின் சி இளமையான சருமத்துக்கு உதவும். சிட்ரிக் அமிலம் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும். மூளையின் செயல்பாடுகளும் அதிகரிக்கும். பித்தம் தணியவும், சிறுநீர் கடுப்பை சரி செய்யவும் பயன்படும். தினமும் திராட்சை சாறு குடிக்க மாதவிடாய் வயிறுவலி பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும். புற்றுநோயை தடுக்கும் பண்புகளும் உண்டு.

இதையும் படிங்க: மாதுளைப்பழ பிரியர்களே... இந்த விஷயத்தை கண்டிப்பா தெரிஞ்சிக்கோங்க.. மிககவனம்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#health tips #Black Grape Health Benefits #கருப்பு திராட்சை நன்மைகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story