×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மலச்சிக்கல் முதல் இதய ஆரோக்கியம் வரை.. நார்ச்சத்து நிறைந்த இந்த பழங்கள் போதும்.!

உடலுக்கு தேவையான நார்ச்சத்தை வழங்கும் கிவி, ஆப்பிள், ப்ளூபெர்ரி போன்ற பழங்கள் செரிமானத்தை மேம்படுத்தி உடல் நலத்தை பாதுகாக்க உதவுகின்றன.

Advertisement

நார்ச்சத்து நிறைந்த பழங்கள் செரிமானத்தை சீராக்கி உடல் நலத்தை மேம்படுத்த உதவுகின்றன. இப்பதிவில் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பழங்கள் குறித்து காணலாம்.

ஒரு தனிநபரின் ஆரோக்கியமான வாழ்க்கைக்கு முக்கிய தேவை நார்ச்சத்து ஆகும். தற்போதைய வேகமான வாழ்க்கை முறையில் நார்ச்சத்து என்பது கேள்விக்குறியாகி இருக்கிறது. உடலுக்கு நன்மை தரும் காய்கறிகள், பழங்களை சாப்பிடுவதை தவிர்த்து துரித உணவுகள் உண்ணும் மோகமும் அதிகரித்திருக்கிறது. 

நார்ச்சத்தின் அவசியம்:

நார்ச்சத்து செரிமானத்தை சீராக்கவும், உடல் நலத்தை மேம்படுத்தவும், உடலை சுறுசுறுப்புடன் வைக்கவும் உதவுகிறது. வாழைப்பழம் அதிக நன்மையை கொண்ட நார்ச்சத்து நிறைந்த பழமாக கருதப்பட்டாலும், பிற பழங்களும் இருக்கின்றன. இந்தப்பதிவில் நார்ச்சத்து அதிகம் நிறைந்த பழங்கள் குறித்து விரிவாக காணலாம். 

இதையும் படிங்க: எலும்புக்கு வலுசேர்க்கும், சப்போட்டா பழம்.. மன அழுத்தத்தை குறைக்க உதவும்.!

கிவி பழம்: 

கிவி பழம் புளிப்பு மற்றும் இனிப்பு சுவை கொண்டது. இதனை உண்பதன் மூலம் செரிமான கோளாறுகள் சரியாகும். மலச்சிக்கல் பிரச்சனையால் அவதிப்படுவோருக்கு இது நல்ல பலனை தரும். காலை உணவுடன் கிவி பழத்தை சேர்த்துக் கொள்வது உடலை புத்துணர்ச்சியுடன் வைத்துக்கொள்ள உதவும். 

தினமும் ஒரு ஆப்பிள்:

தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிடுவது உடலுக்கு ஏராளமான சத்துக்கள் கிடைக்க வழிவகை செய்யும். இதில் இருக்கும் நார்ச்சத்து குடலில் இருக்கும் நல்ல பாக்டீரியாக்களை வளர்க்கும். மேலும் செரிமானத்தை மேம்படுத்தும். நீண்ட நேரம் பசி இல்லாமல் இருக்கவும் உதவும். பள்ளிக்குச் செல்லும் குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும் இந்த ஆப்பிள் ஏற்றது. இதனை தேன், தயிர் போன்றவற்றிலும் சேர்த்து சாப்பிடலாம். 

ப்ளூபெர்ரியின் நன்மைகள்:

ப்ளூபெர்ரி பழங்கள் அளவில் சிறிதாக இருந்தாலும் மிகப்பெரிய நன்மைகளைக் கொண்டதாகும். இதில் இருக்கும் நார்ச்சத்து, ஆன்ட்டி ஆக்சிடென்ட் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உயர்த்த உதவுகிறது. மேலும் உடல் நலத்தையும், இதய நலத்தையும் மேம்படுத்துகிறது.

இதையும் படிங்க: "நீரின்றி அமையாது உலகு." எப்போது? எப்படி..? எவ்வளவு? குடிக்க வேண்டும்.!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#fiber rich fruits #நார்ச்சத்து #health tips
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story