×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க.!

உடலில் எண்ணெய் தேய்த்து குளிப்பதால் ஏற்படும் நன்மைகள்.. தெரிஞ்சுக்கோங்க., அசந்துபோவீங்க.!

Advertisement

நமது உடலின் மிகப்பெரிய உறுப்பில், முக்கியமானதாக அமைந்துள்ளது சருமம். இந்த சருமம் பல காரணியால் பாதிப்புக்குள்ளாகி வருகிறது. சூரிய ஒளி, முதுமை, புகைபிடித்தல், குளிர்ந்த காலம், சோப்புகள் பயன்பாடு என்று பல விஷயத்தால் சருமம் தனது ஈரப்பதத்தை இழந்து வருகிறது. சருமத்தை ஆரோக்கியமாகவும், பளபளப்புடன் பராமரிக்கவும் நாம் கட்டாயம் அதற்கான வழிமுறைகளை செய்து வர வேண்டும்.

தீபாவளி பண்டிகையின் போது உடலில் எண்ணெய் தடவி மசாஜ் செய்து குளிப்பது தமிழர்களின் வாழ்வியலில் பாரம்பரியமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இதனை வாரத்திற்கு ஒருமுறை செய்பவர்களும் இருக்கிறார்கள். இதனால் சருமம் மென்மையுடன் இருக்கும். பழங்காலத்தில் இருந்து பெண்கள், குழந்தைகளின் பராமரிப்பில் எண்ணெய் தவிர்க்க இயலாத ஒன்றாகியுள்ளது.

உடலில் எண்ணெய்த்தேய்த்து மசாஜ் செய்து குளிப்பதால் தோல் பிரச்சனைகள் சரியாகும். எண்ணெயை இளம் சூட்டில் உடலில் தேய்த்து குளித்து வந்தால் சருமத்திற்கு பல ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும். 

எண்ணெயை தேய்த்து குளித்து வந்தால் சருமத்திற்கு புத்துயிர் கிடைக்கிறது. குளிர்காலத்தில் கடுகு, வால்நட் இயற்கை எண்ணெய்களை தேய்த்து குளிப்பதால், தோல் அடுக்கில் ஏற்படும் ஈரப்பத இழப்பு பிரச்சனையை தடுக்கலாம். வறண்ட சருமம், தோல் அரிப்பு பிரச்சனைகளை எதிர்த்து போராடவும் உதவி செய்கிறது. 

மசாஜ் செய்வதால் உடலில் உள்ள ஆக்சிடாஸின் என்ற ஹார்மோன் வெளியேறுகிறது. இது உடலையும், மனதையும் தளர்வடைய வைக்கும். இந்த ஹார்மோன் அதிகளவு சுரந்தால் உடல் மற்றும் மனதளர்வு ஏற்படும். மன அழுத்தத்தை குறைக்க எண்ணெய் மசாஜ் உதவி செய்கிறது. இளம் சூடுள்ள எண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் உடலின் இரத்த ஓட்டம் அதிகரிக்கும். தசைகளை தளர்வடைய உதவி செய்யும். 

விளையாடும் போது  ஏற்படும் காயத்திற்கு மருந்தாக மசாஜ் அமைகிறது. எண்ணெய் சருமத்தில் இருக்கும் ஈரப்பதத்தை தொடர்ந்து தக்கவைப்பதால், உடலில் ஏற்படும் சுருக்கம் குறையும். இதனால் முதுமையான தோற்றம் ஏற்படும் பிரச்சனை சரியாகும். சரும செல்களின் வளர்ச்சி மேம்பட்டு, சருமத்தை இளமையாக வைக்க உதவி செய்கிறது.

சூரியனால் வெளியிடப்படும் புற ஊதாக்கதிர்கள் தோல் புற்றுநோயை ஏற்படுத்தும். அதனை தவிர்க்க எண்ணெய் மசாஜ் அல்லது எண்ணெய் குளியல் அவசியமாகிறது. தேங்காய் எண்ணெய் சரும ஈரப்பதத்தை மட்டுமல்லாது, தீங்கு விளைவிக்கும் புறஊதாக்கதிர்கள் தாக்கத்தை 20 % குறைக்கவல்லது. எண்ணெய் குளியல் உடலில் சேரும் நச்சை அகற்றவும் உதவி செய்கிறது.

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Health #health tips #Oil Massage #Oil Bath #Ladies Corner #Tamil Spark
 
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story