தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!

மேடையில் வைத்து காதலியை முத்தமிட்ட விஷால்.. திருமணம் எப்போ தெரியுமா?.!

vishal and sai dhanshika reveals their marriage date Advertisement

தான் காதலிப்பதை உறுதிசெய்த விஷால் மேடையில் வைத்தே தனது காதலியான சாய் தன்ஷிகாவின் நெத்தியில் முத்தமிட்டார்.

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான விஷால் ரசிகர்களால் புரட்சி தளபதி என்று அன்போடு அழைக்கப்பட்டு வருகிறார். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராகவும் பொறுப்பு வகித்து உள்ள விஷால், இதுவரை திருமணம் செய்யாமல் அது தொடர்பான அறிவிப்பை தள்ளிப் போட்டு வந்தார். 

காதலை உறுதி செய்த விஷால் :

இதனிடையே நேற்று சென்னையில் யோகி டா என்ற படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஷால் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். அப்போது படத்தின் இயக்குனர் உதயகுமார், விஷால் - சாய் தன்ஷிகா காதலித்து வருவதாக கூறினார். 

இதையும் படிங்க: அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!

திருமணத்தை அறிவித்த காதல் ஜோடி :

இதனால் வெட்கத்தில் தலை குனிந்து சிரித்த விஷால் பலரும் கவனத்தையும் பெற்றார். அதேபோல சாய் தன்ஷிகாவும் வெட்கத்தில் சிரித்தார். இதனையடுத்து இருவரும் சேர்ந்து தாங்கள் ஆகஸ்ட் 29ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்தனர். 

நெத்தியில் முத்தமிட்ட விஷால் :

மேலும் கடந்த 15 ஆண்டுகளாக நட்பு ரீதியாக தொடர்ந்த பழக்கம் தற்போது காதலாக மலர்ந்துள்ளதாகவும் தெரிவித்தனர். தங்களது திருமண தேதியை கூறிய பின் இருவரும் மேடையிலேயே நெத்தியில் முத்தமிட்டனர். இதனால் காதல் ஜோடிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

இதையும் படிங்க: அட இவரா?.. 4 மாதத்தில் திருமணமாம்.. விஷாலை திருமணம் செய்யும் பிரபல நடிகை?.. குஷியில் ரசிகர்கள்.!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#Vishal marriage #Sai Dhanshika #vishal #விஷால் #சாய் தன்ஷிகா
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story