×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

விளையாட்டாக நடிகர் விக்ரம் போட்ட ஒரே ஒரு வீடியோ.... அடுக்கடுக்காக வெளிவந்த அதிர்ச்சி உண்மைகள்! சிக்கிய தொழிலதிபர்.... வனத்துறை நடத்திய அதிரடி வேட்டை..!!!

நடிகர் விக்ரம் லார் கிப்பான் குரங்குடன் விளையாடிய வீடியோ சர்ச்சையான நிலையில், ஈரோடு தொழிலதிபரிடம் இருந்து குரங்குகள் விற்பனை செய்யப்பட்ட விவகாரம் அம்பலம்.

Advertisement

 

நடிகர் விக்ரம் அரியவகை லார் கிப்பான் குரங்குடன் விளையாடும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு, சர்ச்சை எழுந்ததும் அதை நீக்கியுள்ளார். இதையடுத்து வனத்துறையினர் நடத்திய விசாரணையில், உரிய அனுமதியின்றி கிப்பான் குரங்கு வளர்க்கப்பட்ட விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக ஈரோட்டைச் சேர்ந்த தொழிலதிபர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, அவரது பண்ணையில் இருந்த அரியவகை வெளிநாட்டு விலங்குகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

வைரலான வீடியோவால் தொடங்கிய விசாரணை

தென்கிழக்கு ஆசியாவை பூர்வீகமாகக் கொண்ட லார் கிப்பான், அழிவின் விளிம்பில் உள்ள பாதுகாக்கப்பட்ட விலங்கு இனங்களில் ஒன்றாகும். உரிய அனுமதி மற்றும் ஆவணங்கள் இல்லாமல் இத்தகைய விலங்குகளை வைத்திருப்பது சட்டவிரோதம். இந்த நிலையில், நடிகர் விக்ரம் குரங்குடன் விளையாடும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவியது.

இதையும் படிங்க: நயன்தாரா என்னப்பா இப்படி ஆகிட்டாங்க? புகைப்படத்தைப் கண்டு மிரண்ட ரசிகர்கள்.. பின்னணி உண்மை இதோ..!!!

சர்ச்சை அதிகரித்த நிலையில், விக்ரம் அந்த வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்கினார். இதையடுத்து வனத்துறை அதிகாரிகள் விசாரணையை தொடங்கினர். முதற்கட்ட விசாரணையில், சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள விக்ரமின் சம்பந்தியான ரங்கநாதனின் பண்ணை வீட்டில் அந்த குரங்கு வளர்க்கப்பட்டு வந்ததும், அங்கு விக்ரம் சென்றபோது வீடியோ எடுக்கப்பட்டதும் தெரியவந்தது.

ஈரோடு தொழிலதிபரிடம் இருந்து குரங்குகள் விற்பனை

தொடர்ந்து அதிகாரிகள் நடத்திய விசாரணையில், இந்த குரங்கு ஈரோடு மாவட்டம் பெருந்துறையைச் சேர்ந்த தொழிலதிபர் கேசவநாதனிடம் இருந்து விற்பனை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. கடந்த 2020-ம் ஆண்டு மலேசியாவில் இருந்து மணிப்பூரைச் சேர்ந்த ஒருவர் மூலம் சில லார் கிப்பான் குரங்குகள் இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டதாகவும், பின்னர் அவை தத்தெடுப்பு முறையில் கேசவநாதனை சென்றடைந்ததாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது.

அதன்பின், வனத்துறை அனுமதியோ உரிய ஆவணங்களோ இல்லாமல் கடந்த ஆகஸ்ட் மாதம் இரண்டு கிப்பான் குரங்குகளை சென்னைக்கு அவர் விற்பனை செய்ததாக அதிகாரிகள் கண்டறிந்தனர். இதையடுத்து லார் கிப்பான் குரங்குகள் தொடர்பான விற்பனை மற்றும் பராமரிப்பு குறித்து வனத்துறையினர் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பண்ணையில் சோதனை; அரியவகை விலங்குகள் பறிமுதல்

விசாரணைக்கு கேசவநாதன் முறையாக ஒத்துழைக்கவில்லை எனக் கூறப்படும் நிலையில், ஈரோட்டில் உள்ள அவரது பண்ணையில் வனத்துறை அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது லார் கிப்பான் குரங்குகள் மட்டுமின்றி, செர்வால் பூனைகள் மற்றும் அடற்சுருட்டை வால் குரங்குகள் உள்ளிட்ட பல அரியவகை வெளிநாட்டு விலங்குகள் அங்கு வளர்க்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

அந்த விலங்குகளை வனத்துறையினர் பறிமுதல் செய்து, பாதுகாப்பாக வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். இதற்கிடையே, கேசவநாதன் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், கைது நடவடிக்கையைத் தவிர்க்க ஈரோடு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் பெற்றுள்ளார்.

மறுபுறம், நடிகர் விக்ரமிடம் நடத்தப்பட்ட விசாரணை மற்றும் அவருக்கு வனத்துறை சார்பில் நோட்டீஸ் வழங்கப்பட்டதா என்பது தொடர்பான அடுத்தகட்ட தகவல்கள் இதுவரை வெளியாகவில்லை. வெளிநாட்டு விலங்குகள் வளர்ப்பு தொடர்பாக அதிகாரிகளின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

 

இதையும் படிங்க: ஐயோ.... ஐந்து நாட்களாக பூட்டி கிடந்த வீடு! அக்கம் பக்கத்தினரால் வெளிவந்த உண்மை... இசையமைப்பாளரின் மர்ம சாவு..! அதிர்ச்சி சம்பவம்!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#விக்ரம் #Lar Gibbon #வனத்துறை #ஈரோடு தொழிலதிபர் #வெளிநாட்டு விலங்குகள்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story