×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நானே கண்டுபிடிச்ச பிறகு மனசு உடைஞ்சுட்டேன்! திருந்த சொல்லியும் திருந்தல....விஜய் தன் அந்தஸ்துக்கு ஏற்ப நிரந்தர ஜீவனாம்சம் தரணும்! அடுக்கி தள்ளிய சங்கீதா...!!!

தமிழ் சினிமா நடிகர் விஜயின் மனைவி சங்கீதா செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து மனு தாக்கல். குற்றச்சாட்டுகள் பரபரப்பு.

Advertisement

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராகவும், சமீபத்தில் அரசியலிலும் களம் இறங்கியவராகவும் இருக்கும் விஜய் குறித்து புதிய சர்ச்சை வெடித்துள்ளது. குடும்ப வாழ்க்கையைச் சுற்றியுள்ள இந்த விவகாரம் தற்போது திரையுலகையும் அரசியல் வட்டாரங்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனுத்தாக்கல்

விஜயின் மனைவி சங்கீதா, செங்கல்பட்டு குடும்ப நல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனுத்தாக்கல் செய்துள்ளார். சுமார் 21 பக்கங்களைக் கொண்ட இந்த மனுவில் பல முக்கிய குற்றச்சாட்டுகள் இடம் பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுத்தாக்கல் வெளிவந்ததும் சமூக வலைதளங்களில் பெரும் பரபரப்பு நிலவுகிறது.

திருமணத்தை மீறிய உறவு குற்றச்சாட்டு

மனுவில், நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் விஜய் இருந்ததாக சங்கீதா குற்றம் சாட்டியுள்ளார். அந்த நடிகையுடன் வெளிநாடுகள் மற்றும் பொதுஇடங்களுக்கு சென்றதாகவும், அவருடன் எடுத்த புகைப்படங்கள் வெளியானபோதும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது தன்னுக்கும் தன் குழந்தைகளுக்கும் மிகுந்த அவமானத்தை ஏற்படுத்தியதாக அவர் மனுவில் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: எடப்பாடிக்கு நேரடியாக சவால் விட்ட செங்கோட்டையன்! தவெகவில் அடுத்தடுத்து இணையும் அதிமுக வின் அதிருப்தி தலைவர்கள்.....! தவெக வின் அசூர வளர்ச்சி!

மேலும், இந்த விவகாரம் 2021ஆம் ஆண்டு தன்னுக்கு தெரிய வந்ததாகவும், இதைப் பற்றி கேள்வி எழுப்பியபோது தன்னை அவமானப்படுத்தி தனியாக வாழும்படி நிர்பந்தித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. உறவை கைவிடுவதாக கூறியும் தொடர்ந்து அந்த தொடர்பு நீடித்ததாகவும், இதனால் மனரீதியான வேதனை மற்றும் நம்பிக்கை துரோகம் ஏற்பட்டதாகவும் சங்கீதா தெரிவித்துள்ளார்.

ஜீவனாம்சம் மற்றும் வீட்டு வசதி கோரிக்கை

விஜயின் அந்தஸ்து மற்றும் வருமானத்தை கருத்தில் கொண்டு நிரந்தர ஜீவனாம்சம் வழங்க வேண்டும் என்றும், விவாகரத்து தீர்ப்பு வரும் வரை தற்போது தங்கி வரும் நீலாங்கரை இல்லத்தில் தங்க அனுமதி வழங்க வேண்டும் என்றும் மனுவில் கோரப்பட்டுள்ளது.

அதே நேரத்தில், விஜய் தரப்பிலிருந்து அழுத்தம் வந்தால் சம்பந்தப்பட்ட நடிகையை எதிர்மனுதாரராக சேர்ப்பதோடு, தன் கணவருடன் உள்ள உறவை நிரூபிக்கும் ஆதாரங்களை வெளியிட தயங்க மாட்டேன் என சங்கீதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

திரையுலகில் இருந்து அரசியலுக்கு அடியெடுத்து வைத்துள்ள நிலையில் இந்த சர்ச்சை, விஜயின் பொது வாழ்வில் எவ்வாறு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது கவனிக்க வேண்டிய அம்சமாக உள்ளது. இந்த வழக்கின் அடுத்த கட்ட விசாரணைகள் மற்றும் நீதிமன்ற தீர்ப்பு மீது பொதுமக்கள் தீவிர கவனம் செலுத்தி வருகின்றனர்.

 

இதையும் படிங்க: பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்! விவாகரத்து கேட்கும் சங்கீதா... அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#vijay #Sangeetha #விவாகரத்து #tamil cinema #Chengalpattu Court
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story