பிரபல நடிகையுடன் திருமணத்தை மீறிய உறவில் இருக்கும் விஜய்! விவாகரத்து கேட்கும் சங்கீதா... அடுக்கடுக்கான குற்றச்சாட்டு…!
நடிகர் விஜய் - சங்கீதா இடையிலான விவாகரத்து சர்ச்சை புதிய திருப்பம். செங்கல்பட்டு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ததாக தகவல்; ரசிகர்கள் அதிர்ச்சி.
தமிழக அரசியல் மற்றும் திரையுலகில் ஒரே நேரத்தில் கவனம் ஈர்த்து வரும் சூழலில், நடிகர் விஜய் – சங்கீதா தம்பதியின் இல்லற வாழ்க்கை குறித்து பரவி வந்த வதந்திகள் தற்போது நீதிமன்றத்தை எட்டியுள்ளன என்ற தகவல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நீண்டகாலமாக பேசப்பட்ட இந்த சர்ச்சை, இப்போது புதிய கட்டத்தை நோக்கி நகர்கிறது.
25 ஆண்டுகள் கழித்து நீதிமன்றப் படிகள்?
திரையுலகில் முன்னணி நட்சத்திரமாகவும், தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவராகவும் விளங்கும் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா இடையிலான உறவு குறித்து கடந்த சில ஆண்டுகளாக பல்வேறு யூகங்கள் கிளம்பியிருந்தன. திரைப்பட இசை வெளியீட்டு விழாக்கள், அரசியல் மாநாடுகள் உள்ளிட்ட முக்கிய நிகழ்வுகளில் சங்கீதா பங்கேற்காதது விவாதத்துக்கு வழிவகுத்தது. மகளின் கல்விக்காக லண்டனில் தங்கி இருப்பதாக ஒரு தரப்பு தெரிவித்தாலும், இருவரும் பிரிந்து வாழ்கிறார்கள் என்ற தகவல்கள் கோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்பட்டன.
மனுவில் குறிப்பிடப்பட்ட காரணங்கள்
சங்கீதா செங்கல்பட்டு குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்துள்ளதாக வெளியாகியுள்ள தகவல்கள் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளன. 1999ஆம் ஆண்டு தொடங்கிய தங்களது திருமண வாழ்க்கை ஆரம்பத்தில் மகிழ்ச்சிகரமாக இருந்ததாகவும், பின்னர் 2021ஆம் ஆண்டு முதல் உறவில் விரிசல் ஏற்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையும் படிங்க: இடைவெளிக்கு பிறகு மீண்டும் மிரட்ட ஆரம்பிக்கும் விஜய்! கரூருக்குப் பிறகு இப்போ சேலத்தில்... விஜயின் அடுத்த மூவ் இதுதான்.! அரசியலில் பரபரப்பு....!
குறிப்பாக, ஒரு நடிகையுடன் ஏற்பட்டதாக கூறப்படும் திருமணத்தை மீறிய உறவு தான் இந்தப் பிரிவிற்கான முக்கிய காரணம் என மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. அந்த உறவை முடிக்க உறுதி அளித்தபோதும், பின்னர் அது தொடர்ந்ததாக சங்கீதா தரப்பு குற்றஞ்சாட்டியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சொத்து மற்றும் ஜீவனாம்சம் கோரிக்கை
சென்னை நீலாங்கரையில் உள்ள இல்லத்தில் தொடர்ந்து வசிக்க அனுமதி வழங்க வேண்டும் என்றும், தகுந்த ஜீவனாம்சம் வழங்கப்பட வேண்டும் என்றும் சங்கீதா கோரிக்கை விடுத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த மனுவை தொடர்ந்து நீதிமன்றம் விரைவில் விசாரணை தொடங்கும் என்றும், அதன்படி விஜய்க்கு நோட்டீஸ் அனுப்பப்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ரசிகர்கள் மற்றும் அரசியல் வட்டாரங்களில் விவாதம்
சமூக வலைதளங்களில் நடிகர் விஜய் மற்றும் நடிகை த்ரிஷா குறித்து பல்வேறு கருத்துக்கள் பரவி வரும் நிலையில், இந்த விவகாரம் மேலும் தீவிரமான விவாதமாக மாறியுள்ளது. ஏற்கனவே கோலிவுட்டின் பல முன்னணி ஜோடிகள் பிரிந்திருக்கும் சூழலில், விஜய்யின் 25 ஆண்டுகால இல்லற வாழ்க்கையும் சிக்கலில் சிக்கியிருப்பது ரசிகர்களுக்கு கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தீவிர அரசியல் பயணத்தை தொடங்கியுள்ள நேரத்தில், இந்த தனிப்பட்ட வாழ்க்கைச் சர்ச்சை அவரது அரசியல் எதிர்காலத்தில் தாக்கம் செலுத்துமா என்பது குறித்து அரசியல் விமர்சகர்கள் கவனித்து வருகின்றனர். எனினும், அதிகாரப்பூர்வ உறுதிப்படுத்தல் வெளியாகும் வரை, இந்த விவகாரம் குறித்து பல கேள்விகள் பதிலின்றி தொடர்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: தவெக கட்சியின் சின்னம் "வெளிவந்த 15 நிமிடங்களுக்குள்" உலகப்புகழ் பெறும்! அப்படி என்ன சின்னம்?... புஸ்ஸி ஆனந்த் அதிரடி அறிவிப்பு.!!