அப்பாடா... முடிவுக்கு வந்ததா விஜய் - த்ரிஷா உறவு...! இப்போ பேச்சுவார்த்தையே இல்லையா..? பின்னணி என்ன..? வெளியான பரபரப்பு தகவல்கள்...!!!
சில்வர்ஸ்டோன் ரேஸ் நிகழ்வில் அஜித்தை விஜய் சந்தித்த நிலையில், த்ரிஷா வந்தபோது அவர் விலகிச் சென்றதாக கூறப்படும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பிரிட்டனின் புகழ்பெற்ற சில்வர்ஸ்டோன் மைதானத்தில் நடைபெற்ற ரேஸ் போட்டியில் நடிகர் அஜித் குமார் பங்கேற்றார். சிறப்பு விருந்தினராக தமிழக முதல்வர் விஜய்யும், படப்பிடிப்புக்காக லண்டன் சென்றிருந்த நடிகை த்ரிஷாவும் நிகழ்வில் கலந்துகொண்டனர். அங்கு நடந்த ஒரு சந்திப்பு தொடர்பான வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் கவனம் பெற்றுள்ளது.
அஜித்தை சந்தித்து வாழ்த்து தெரிவித்த விஜய்
ரேஸ் களத்தில் அஜித்தை நேரில் சந்தித்த விஜய், அவரை கட்டிப்பிடித்து வாழ்த்து தெரிவித்தார். இதற்கிடையே த்ரிஷா அங்கு வந்தபோது, விஜய் அவரை பார்த்ததும் உடனடியாக விலகிச் சென்றது போன்ற காட்சிகள் வீடியோவில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
நடிகர் அஜித்தின் அழைப்பின் பேரிலேயே த்ரிஷா நிகழ்வுக்கு வந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஆனால் விஜய்யும் த்ரிஷாவும் நேரில் சந்தித்தபோது வழக்கம்போல் பேசிக்கொள்ளவில்லை என்றும், இருவரும் சற்று இடைவெளியில் நின்றதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவி வருகின்றன.
வைரல் வீடியோவால் எழுந்த விவாதம்
வீடியோவில் பதிவான சில நொடிகளை வைத்து பல்வேறு விதமான கருத்துகள் பகிரப்பட்டு வருகின்றன. கேமராக்கள் இருப்பதை கவனித்ததால் விஜய் அங்கிருந்து நகர்ந்தாரா அல்லது இருவருக்கும் இடையே உண்மையிலேயே உரையாடல் நடைபெறவில்லையா என்பது தெளிவாக தெரியவில்லை.
இதுகுறித்து சினிமா வட்டாரங்களிலும் சமூக வலைதளங்களிலும் பல்வேறு ஊகங்கள் பரவி வருகின்றன. எனினும், விஜய் - த்ரிஷா சந்திப்பு தொடர்பாக இருவரின் தரப்பிலும் எந்தவொரு அதிகாரப்பூர்வ விளக்கமும் வெளியாகவில்லை. சில்வர்ஸ்டோன் நிகழ்வில் பதிவான வைரல் வீடியோ மட்டுமே தற்போது விவாதத்துக்கு காரணமாகியுள்ளது.
இதையும் படிங்க: த்ரிஷாவால் குடும்பவே திணறுது ... சங்கீதாவைச் சமாதானப்படுத்த லண்டன் பறந்த விஜய்யின் பெற்றோர்...! கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!!