பழைய பதிவால் புதிதாக வெடித்த வெடிகுண்டு! விஜய் சேதுபதியின் மறைமுக பேச்சால் கடும் எதிர்ப்பு..!!!
பிக்பாஸ் சீசன் 10ல் விஜய் சேதுபதி பேசிய தலைமை குறித்த கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், பழைய சமூக வலைதள பதிவும் மீண்டும் பேசுபொருளாகியுள்ளது.
பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சியில் தொகுப்பாளர் விஜய் சேதுபதி பேசிய தலைமை குறித்த கருத்துகள் தற்போது அரசியல் வட்டாரத்திலும் சமூக வலைதளங்களிலும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. குறிப்பிட்ட எந்த அரசியல் கட்சியையோ தலைவரையையோ அவர் நேரடியாகக் குறிப்பிடாத நிலையில், அவரது பேச்சு தமிழக முதலமைச்சர் விஜய்யை மறைமுகமாக விமர்சிப்பதாக சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். இதற்கிடையே, விஜய் சேதுபதி தொடர்பாக கடந்த ஆண்டு வெளியான பழைய சமூக வலைதளப் பதிவையும் சிலர் மீண்டும் பகிர்ந்து வருகின்றனர்.
தலைமை குறித்து விஜய் சேதுபதி பேசியது என்ன?
பிக்பாஸ் வீட்டின் முதல் வாரத் தலைவராக இருந்த ஷாதிகாவுக்கு அறிவுரை வழங்கியபோது, பொறுப்பும் பிரச்சனையும் வரும்போது அதிலிருந்து விலகிச் செல்வது தலைமைக்கு அழகல்ல என விஜய் சேதுபதி குறிப்பிட்டார். வாக்குறுதிகளை நிறைவேற்றி பொறுப்பை ஏற்றுக்கொள்வதே உண்மையான தலைமை என்றும், பிரச்சனை ஏற்பட்டால் எதிரணியின் மீது பழியை சுமத்திவிட்டு விலகுவது தலைமைப் பண்பு அல்ல என்றும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: த்ரிஷாவால் குடும்பவே திணறுது ... சங்கீதாவைச் சமாதானப்படுத்த லண்டன் பறந்த விஜய்யின் பெற்றோர்...! கடைசியில் நடந்த டுவிஸ்ட்..!!!
இந்த கருத்துகளில் எந்த அரசியல் நபரின் பெயரும் இடம்பெறவில்லை. இருந்தபோதிலும், தமிழக அரசியல் சூழலை மனதில் வைத்து விஜய் சேதுபதி பேசியதாக சில நெட்டிசன்கள் சமூக வலைதளங்களில் விவாதத்தை தொடங்கினர். குறிப்பாக, விஜய் சேதுபதி கருத்து குறித்து முதலமைச்சர் விஜய்யின் ஆதரவாளர்கள் பல்வேறு பதிவுகளை வெளியிட்டு வருகின்றனர்.
மீண்டும் பகிரப்படும் பழைய சமூக வலைதள பதிவு
இந்த நிலையில், விஜய் சேதுபதி குறித்து ரம்யா மோகன் என்பவர் கடந்த ஆண்டு எக்ஸ் தளத்தில் வெளியிட்டதாக கூறப்படும் பதிவு மீண்டும் கவனம் பெற்றுள்ளது. அந்த பதிவில், திரையுலகில் போதைப்பொருள் பயன்பாடு மற்றும் பட வாய்ப்புகளுக்காக பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் சுரண்டல் குறித்து அவர் கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்திருந்தார்.
மேலும், விஜய் சேதுபதி தொடர்பாகவும் அந்த பதிவில் சில குற்றச்சாட்டுகள் கூறப்பட்டிருந்தன. ஆனால், அந்தப் பதிவுக்குப் பின்னர் அது நீக்கப்பட்டதாகவும், ரம்யா மோகனின் எக்ஸ் கணக்கும் தற்போது செயல்பாட்டில் இல்லை என்றும் கூறப்படுகிறது. அந்த குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரமாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் வெளியாகவில்லை என்பதும் கவனிக்க வேண்டிய அம்சமாகும். எனவே, சமூக வலைதளங்களில் மீண்டும் பகிரப்படும் அந்த பதிவை உறுதி செய்யப்பட்ட செய்தியாக கருத முடியாது.
விஜய் ஆதரவாளர்கள் எதிர்ப்பு
தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய்யை குறிக்கும் வகையில் விஜய் சேதுபதி பேசியதாக கூறி அவரை விமர்சிக்கும் பதிவுகள் அதிகரித்துள்ளன. இதனுடன் பழைய சமூக வலைதள பதிவும் இணைத்து பகிரப்படுவதால் விவாதம் மேலும் தீவிரமடைந்துள்ளது. இதற்கு பதிலளிக்கும் வகையில் விஜய் சேதுபதியின் ஆதரவாளர்களும் சமூக வலைதளங்களில் கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.
அதே நேரத்தில், பிக்பாஸ் நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி பேசிய வார்த்தைகள் உண்மையில் யாரை குறிக்கின்றன என்பது குறித்து அவர் தரப்பில் எந்த நேரடி விளக்கமும் வெளியாகவில்லை. இதனால், அவரது பேச்சு அரசியல் ரீதியாக புரிந்துகொள்ளப்பட வேண்டுமா அல்லது நிகழ்ச்சியின் சூழலில் கூறப்பட்ட பொதுவான தலைமை குறித்த அறிவுரையா என்ற விவாதம் தொடர்கிறது.
இதையும் படிங்க: மகனுக்காக தந்தை எடுத்த முக்கிய முடிவு.. வெளியானது அதிகாரப்பூர்வ அறிவிப்பு!