இப்படி ஒரு ட்விஸ்ட் இருக்கா? விவாகரத்து வழக்கை வாபஸ் பெற்ற சங்கீதா..! பின்ணனியில் இருக்கும் அதிரடி திருப்பம்...!!!
முதல்வர் விஜய், சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கை தொடர விருப்பமில்லை என சங்கீதா தரப்பு தெரிவித்ததை அடுத்து, வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது.
தமிழக முதல்வர் விஜய் மற்றும் அவரது மனைவி சங்கீதா தொடர்பான விவாகரத்து வழக்கில் தற்போது முக்கிய திருப்பம் ஏற்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் நிலுவையில் இருந்த வழக்கை இனி தொடர விருப்பமில்லை என்று சங்கீதா தரப்பு தெரிவித்துள்ளது. இதையடுத்து, வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
வீடியோ காட்சி மூலம் நீதிமன்றத்தில் ஆஜரான சங்கீதா, தற்போதைய நிலையில் விவாகரத்து வழக்கை தொடர்ந்து நடத்த விரும்பவில்லை என தெரிவித்ததாக நீதிமன்ற பதிவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து, எதிர்காலத்தில் தேவைப்பட்டால் புதிய மனு தாக்கல் செய்யும் உரிமையுடன் தற்போதைய மனுவை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி அளித்தது.
இதையும் படிங்க: BREAKING: விசாரணை முடிந்த பின்.... சங்கீதா சொன்ன அந்த ஒரு வார்த்தை! ஷாக்கில் CM விஜய்..... யாரும் எதிர்பார்க்காத ட்விஸ்ட்....!!!
வழக்கை வாபஸ் பெற நீதிமன்றம் அனுமதி
சங்கீதா தரப்பின் முடிவை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நிலுவையில் இருந்த விவாகரத்து வழக்கு மனுவை திரும்பப் பெற அனுமதி அளித்துள்ளது. இதனால், தற்போது அந்த வழக்கு தொடரப்படாது என்பது உறுதியாகியுள்ளது. இந்த உத்தரவு வெளியானதும் சமூக வலைதளங்களில் பல்வேறு கருத்துகள் பரவி வருகின்றன.
அரசியல் விவாதத்திலும் இடம்பெற்ற குடும்ப விவகாரம்
விஜய் - சங்கீதா விவாகரத்து விவகாரம் கடந்த சில மாதங்களாக அரசியல் மற்றும் சமூக வலைதள விவாதங்களிலும் இடம்பெற்று வந்தது. விஜயின் குடும்ப வாழ்க்கையை முன்வைத்து பல்வேறு விமர்சனங்களும் கருத்துகளும் வெளியாகின. இதற்கிடையே, விஜயின் மகன் ஜேசன் அண்மையில் அளித்த பேட்டியில் தனது தந்தையைப் பற்றி பெருமையாக பேசியிருந்ததும் கவனம் பெற்றது.
காரணம் குறித்து அதிகாரப்பூர்வ விளக்கம் இல்லை
வழக்கை வாபஸ் பெறுவதற்கான காரணம் குறித்து விஜய் அல்லது சங்கீதா தரப்பில் இதுவரை அதிகாரப்பூர்வ விளக்கம் வெளியாகவில்லை. குடும்ப நலன், பிள்ளைகளின் எதிர்காலம் உள்ளிட்ட காரணங்கள் இருக்கலாம் என சமூக வலைதளங்களில் சிலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். எனினும், அவை உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் மட்டுமே. தற்போது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டிருப்பது, நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கை சங்கீதா தரப்பு வாபஸ் பெற்றிருப்பதும், எதிர்காலத்தில் தேவையெனில் புதிய மனு தாக்கல் செய்ய நீதிமன்றம் வாய்ப்பு வழங்கியிருப்பதும் மட்டுமே.
இதையும் படிங்க: இன்னைக்கே உடனடியாக விசாரிங்க...! எனக்கு ஒரு முடிவு தெரியனும்! சங்கீதா காட்டிய காட்டம்.... செங்கல்பட்டு கோர்ட்டில் பரபரப்பு..!!!