×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

#JustIN: விஜய் குறித்த கேள்வி.. திரிஷா செய்த செயல்.!

TVK Vijay Trisha: தவெக தலைவர் விஜய் குறித்த கேள்விக்கு நடிகை திரிஷா பதில் அளிக்காமல் மௌனமாக கடந்து சென்றார்.

Advertisement

தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் குறித்த கேள்வியை திரிஷா மௌனமாக கடந்து சென்றார்.

விவாகரத்து குற்றசாட்டு:

தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர வேண்டும் என்ற எண்ணத்துடன் களமிறங்கிய தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய், தொடர்ந்து சர்ச்சையை எதிர்கொண்டு வருகிறார். கரூர் துயரத்தில் மிகப்பெரிய பின்னடைவுக்குப்பின் எழுந்து வந்த விஜய், தற்போது அவரது மனைவி சங்கீதாவின் விவாகரத்து கோரிய குற்றசாட்டு குறித்த தகவலால் விமர்சனத்தை எதிர்கொண்டு வருகிறார்.

இதையும் படிங்க: தயாரிப்பாளர் மகளின் ரிசப்ஷனில் தளபதி விஜய்.. திருமண ஜோடிக்கு வாழ்த்து.!

அரசியல் பயணம்:

மேலும், நடிகர் விஜயையும் - நடிகை ஒருவரையும் தொடர்புபடுத்தி பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன. 2026 சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்புக்குமுன் இதுதொடர்பான பல்வேறு கேள்விகள் தொடர்ந்து முன்வைக்கப்பட்டாலும், விஜய் இதனை கண்டுகொள்ளாமல் தொடர்ந்து அரசியல் பயணத்தில் தீவிரமாக களமிறங்கி செயல்பட்டு வருகிறார். 

நல்ல நண்பர்கள்:

சங்கீதா விவாகரத்து தொடர்பான தகவல் வெளியான சில நாட்களுக்கு உள்ளாகவே, தவெக தலைவர் விஜய் மற்றும் நடிகை திரிஷா சேர்ந்து திருமணம் ஒன்றில் கலந்துகொண்டு இருந்தனர். இந்த விஷயம் மிகப்பெரிய அளவில் கவனிக்கப்பட்டது. விஜய்க்கு தெரிந்தவர்கள் இருவரும் நல்ல நண்பர்கள் என கூறினாலும், விஜய்க்கு எதிரானவர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைக்கின்றனர்.

திரிஷா மௌனம்:

இந்நிலையில், சென்னை விமான நிலையம் வழியே பயணம் செய்த நடிகை திரிஷாவிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். விஜயுடன் திருமண நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. இந்த கேள்வியை கண்டுகொள்ளாத நடிகை திரிஷா, மௌனமாக அந்த இடத்தை கடந்து சென்றார். 

இதையும் படிங்க: விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.! 

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#trisha #TVK Vijay #chennai airport #திரிஷா #விஜய் #சென்னை ஏர்போர்ட்
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story