விஜய் - திரிஷா சர்ச்சை.. அந்த காரை இப்போ யாரு வச்சிருக்கா? - விமலின் நக்கல் பதில்.!
நடிகர் விஜய் மற்றும் நடிகை திரிஷா ஒரே காரில் வந்ததாக கூறப்படும் சம்பவம் குறித்து எழுந்த கேள்விக்கு நடிகர் விமல் அளித்த காமெடி பதில் இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது.
விஜய்-திரிஷா ஒரே காரில் வந்ததாக கூறப்படும் விவகாரம் பேசுபொருளாகிய நிலையில், அதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு நடிகர் விமல் அளித்த பதில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.
Vijay - Trisha Controversy: தமிழக அரசியலில் மாற்றத்தை கொண்டு வர களமிறங்கிய தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் கட்சி பணிகளை தீவிரபடுத்தியதில் இருந்து பல்வேறு விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார். கரூரில் நடந்த துயர சம்பவம் மற்றும் அது தொடர்பான வழக்குகள், குற்றச்சாட்டுகள் இன்று வரை பேசு பொருளாக இருக்கும் நிலையில், புதிய பிரச்சினையாக விஜயின் மனைவி சங்கீதா பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து விவாகரத்து கோரிய தகவலும் வெளியாகிறது.
திரிஷாவுடன் ஒரே காரில் வந்த விஜய்:
மேலும் சங்கீதா கோரிய குற்றச்சாட்டுகளை மெய்ப்படுத்தும் வகையில் கல்பாத்தி அகோரம் இல்ல திருமண விழாவில் ஒரே காரில் நடிகை திரிஷாவும், விஜய்யும் வந்தது பேசு பொருளாகி இருந்தது. இதனால் விஜய்க்கு எதிராக பலரும் தங்களது விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். முன்னதாக விஜய்க்கு ஆதரவாக இருந்த பலரும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: திரிஷா - விஜய் விவகாரம்.. மனம் திறந்த நடிகர் ஸ்ரீமன்... ஆமோதிக்கும் ரசிகர்கள்.!
நடிகர் விமலின் பதில்:
இந்த நிலையில் ஒரே காரில் இருவரும் வந்தது தொடர்பாக நடிகர் விமலிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது காமெடியாக பதில் அளிக்க முயன்ற விமல், அந்த காரை தற்போது யார் வைத்திருக்கிறார்கள்? என கேள்வி எழுப்பியதும் அங்கிருந்தவர்கள் சிரித்துள்ளனர். விமலின் மழுப்பலான இந்த பதில் தற்போது சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: விவாகரத்து சர்ச்சைக்கு நடுவில் த்ரிஷா போட்ட முதல் பதிவு! சந்தோஷத்தில் என்ன கூறியுள்ளார் பாருங்க....!! இணையத்தில் வைரல்!!!