×
 
தமிழகம் இந்தியா சினிமா விளையாட்டு வீடியோ

நீங்க யாரு தீர்ப்பு வழங்குறதுக்கு.... அவங்க நீதிபதிகள்! மாற்றத்தை மக்களே தீர்மானிக்கிறார்கள்..... தவெக வெற்றி விமர்சனங்களுக்கு மேடையிலேயே ஆவேசப்பட்டு பேசிய சிவக்குமார்..!!!

தமிழக தேர்தலில் விஜய் தலைமையிலான த.வெ.க வெற்றிக்கு எதிராக எழும் விமர்சனங்களுக்கு நடிகர் சிவக்குமார் பதிலளித்துள்ளார். மக்களின் தீர்ப்பை யாரும் குறை கூற முடியாது என்றார்.

Advertisement

தமிழகச் சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை அமைத்துள்ள த.வெ.க மற்றும் அதன் தலைவர் விஜய் குறித்து எழுந்துள்ள விமர்சனங்களுக்கு மூத்த நடிகர் சிவக்குமார் பதிலளித்துள்ளார். மக்கள் எடுத்த முடிவை விமர்சிப்பது ஏற்க முடியாதது என்றும், ஜனநாயகத்தில் இறுதி தீர்ப்பாளர்கள் மக்கள்தான் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தனியார் நிகழ்ச்சி ஒன்றில் செய்தியாளர்களைச் சந்தித்த போது அவர் இந்தக் கருத்துகளை பகிர்ந்தார். கட்சி தொடங்கி குறுகிய காலத்திலேயே விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றிருப்பது குறித்து பல தரப்புகளில் விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், சிவக்குமாரின் கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க: # சற்று முன் : ஹாப்பி நியூஷ்....மகளிர் உரிமைத்தொகை மாதம் ரூ.2,500 குறித்து அமைச்சர் செங்கோட்டையன் சொன்ன முக்கிய தகவல்...!!!

மாற்றத்தை மக்கள் தீர்மானிக்கிறார்கள்

பேசிய அவர், சமூகத்திலும் அரசியலிலும் மாற்றம் என்பது தவிர்க்க முடியாத ஒன்று என்றார். எளிமைக்கும் நேர்மைக்கும் பெயர் பெற்ற பெருந்தலைவர் காமராஜரையே மக்கள் ஒரு கட்டத்தில் தோற்கடித்து புதிய மாற்றத்தை உருவாக்கியிருந்தார்கள் என்பதை நினைவூட்டினார்.

அதேபோல் நீண்ட கால அரசியல் சூழலுக்குப் பிறகு தற்போதைய இளைய தலைமுறை தங்களுக்கு விருப்பமான புதிய தலைவரைத் தேர்வு செய்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

மக்களின் தீர்ப்பை குறை சொல்ல முடியாது

மக்கள் எப்போதும் நீதிபதிகளைப் போன்றவர்கள் என்றும், அவர்களின் முடிவு சரியா தவறா என்று வெளியில் இருப்பவர்கள் தீர்ப்பு வழங்க முடியாது என்றும் சிவக்குமார் தெரிவித்தார். மக்களின் தீர்ப்பு மீது விமர்சனம் செய்வது ஜனநாயகத்தின் அடிப்படை உணர்வுக்கு எதிரானது என்றார்.

இந்தத் தேர்தலில் பெரும்பாலான வாக்காளர்கள் எந்தவிதப் பணப் பலனும் பெறாமல் தங்கள் விருப்பப்படி வாக்களித்ததாகவும், குறிப்பாக பெண்களின் ஆதரவு த.வெ.க-வுக்கு கணிசமாக இருந்ததாகவும் அவர் பாராட்டிப் பேசினார்.

விஜய் மீது நம்பிக்கை

விஜய் மக்களுக்காக நல்ல நிர்வாகத்தை வழங்குவார் என்று நம்பிக்கை தெரிவித்த சிவக்குமார், காலப்போக்கில் சமூக விழிப்புணர்வு அதிகரிக்கும் போது அரசியல் மற்றும் சினிமா குறித்த மக்களின் பார்வையும் மாறும் என்ற தனது கருத்தையும் பதிவு செய்தார்.

மேலும், விஜய் அரசு மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாக உள்ள நிலையில், அதன் செயல்பாடுகளே எதிர்கால அரசியல் விவாதங்களை தீர்மானிக்கும் என்றும் அவர் மறைமுகமாக சுட்டிக்காட்டினார்.

 

இதையும் படிங்க: என் பையன் என்ன...என்னுடைய பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டான்! அடுத்த தலைமுறை அப்படித்தான்.... ஓப்பனாக போட்டு உடைத்த சிவகுமார்...!!!

Advertisement

Follow @ Google News: செய்திகளை உடனுக்குடன் பெற கூகுள் செய்திகள் பக்கத்தில் Tamil Spark இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். Click Here
#sivakumar #vijay tvk #தமிழக அரசியல் #People Verdict #Tamil Nadu Election
 
 
 
Latest News Home Web Stories Web Stories Latest Videos Videos Share on WhatsApp Share
Next Story