என் பையன் என்ன...என்னுடைய பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டான்! அடுத்த தலைமுறை அப்படித்தான்.... ஓப்பனாக போட்டு உடைத்த சிவகுமார்...!!!
சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் சிவகுமார் பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. விஜய்க்கு இளைஞர்கள், பெண்கள் ஆதரவு அதிகம் என அவர் தெரிவித்துள்ளார்.
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலைத் தொடர்ந்து, நடிகர் சிவகுமார் அளித்துள்ள பேட்டி தற்போது அரசியல் மற்றும் திரை உலக வட்டாரங்களில் பேசுபொருளாக மாறியுள்ளது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய்க்கு இளைஞர்கள் மற்றும் பெண்கள் அளித்த ஆதரவு குறித்து அவர் வெளிப்படையாக பேசியிருப்பது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்த சிவகுமார், முதல்முறையாக வாக்களித்த இளைஞர்களில் பெரும்பாலானோர் எந்தவித பணமும் பெறாமல் நேர்மையாக விஜய்க்கு வாக்களித்ததாக கூறியுள்ளார். குறிப்பாக, இளம் தலைமுறையின் மனநிலையை இந்தத் தேர்தல் வெளிப்படுத்தியுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இளைஞர்கள் ஆதரவு குறித்து பேச்சு
“கிட்டத்தட்ட 95 சதவீத இளைஞர்கள் விஜய்க்கு ஓட்டுப் போட்டிருக்காங்க” என்று கூறிய அவர், பெண்களிடமும் விஜய் பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளதாக குறிப்பிட்டார். மேலும், “என் பையன் என்ன... என் பேரனே விஜய்க்குத்தான் ஓட்டு போட்டிருக்கான்” என்று அவர் சிரித்தபடியே கூறிய பகுதி அதிக கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க: அந்த வீடியோவை எடுத்தது யார்..? இப்படி ஒரு வேலையை செய்தது விஜய்யா..? இல்ல செங்கோட்டையனா..? பகீர் கிளப்பிய டிடிவி தினகரன்..!!
அடுத்த தலைமுறை முடிவை மதிக்க வேண்டும்
தொடர்ந்து பேசிய சிவகுமார், இன்னும் சில ஆண்டுகளில் தாங்கள் இருக்காமல் போகலாம் என்றும், ஆனால் அடுத்த தலைமுறையினர்தான் இந்த நாட்டை முன்னெடுத்து செல்லப் போகிறார்கள் என்றும் கூறினார். அந்த தலைமுறை தங்களுக்கு தேவையான தலைவரை தேர்வு செய்யும் போது, அதை தவறு என்று கூற யாருக்கும் உரிமை இல்லை எனவும் அவர் கருத்து தெரிவித்தார்.
மேலும், புதிய அரசியல் மாற்றங்கள் மக்களுக்கு நல்ல பலன் தரும் என்ற நம்பிக்கையும் அவர் வெளிப்படுத்தினார். சிவகுமார் பேசிய இந்த வீடியோ தற்போது பல சமூக வலைதள பக்கங்களில் பகிரப்பட்டு ட்ரெண்டாகி வருகிறது.